Election Result 2024: இந்தியா கூட்டணி ஓங்கும் 'கை' பட்டாசு, இனிப்பு என கொண்டாடும் காங்கிரஸ்!

Assembly Election 2024 Result Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 8, 2024, 09:53 AM IST
Election Result 2024: இந்தியா கூட்டணி ஓங்கும் 'கை' பட்டாசு, இனிப்பு என கொண்டாடும் காங்கிரஸ்!  title=

Haryana Jammu Kashmir Election Result 2024 Latest Update: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டம் மன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடந்து நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் தலா 90 தொகுதிகள் இருக்கின்றன. ஹரியானாவை பொறுத்தவரை காங்கிரஸ் பாஜாக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை பெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும். 

ஹரியானா யாருக்கு? 

கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவை பொறுத்தவரை பாஜக ஆட்சியில் இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் 55 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கின்றன. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை வைத்து பார்த்தால், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிகிறது 

கடந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், துஷ்யன் சௌத்தாலா தான் கிங் மேக்கராக இருந்து, பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். ஆனால் இந்தமுறை காங்கிரஸ் கட்சியே நேரடியாக ஆட்சியைப் பிடிக்கும் என முன்னணி நிலவரம் உணர்த்துகிறது. 

ஜம்மு காஷ்மீர் யாருக்கு?

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து சந்தித்தன. பாஜக தனித்து போட்டியிட்டது. அதேபோல மெஹபூபா முக்தியினுடைய பிடிபி கட்சி தனியாக போட்டியிட்டது. 

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 

ஆனால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம் என்று இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது ஜம்முகாஷ்மீரில் இருக்கக்கூடிய 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி நிலவரத்தை பார்த்தால், காங்கிரஸ் கூட்டணி  ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிகிறது. 

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஒரு பிரதேசமாக மாற்றப்பட்டு, துணைநிலை ஆளுநரின் உடைய ஆட்சியின் கீழ் ஜம்முகாஷ்மீர் இருந்து வரும் நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்முகாஷ்மீரில் தற்பொழுது தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

மேலும் படிக்க - Haryana, Jammu and Kashmir Election Result 2024 Live: கம்பீரமான வெற்றியை நோக்கி காங்கிரஸ் - ஹரியானா, ஜம்மு காஷ்மீர் முன்னிலை நிலவரம் இதோ!

மேலும் படிக்க - Election Result 2024: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் முக்கிய அம்சம்

மேலும் படிக்க - Haryana State Election 2024: மீண்டும் 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா பாஜக? காங்கிரஸ் நிலை என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News