பெங்களூரு: மே 20-ந் தேதி பெங்களூருவில் நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். ஆனால், கர்நாடகா காங்கிரஸ் அரசில் தலித்துக்கு துணை முதல்வர் பதவி தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த அதிருப்தியாளர்களின் நிலை என்ன?
முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஜி.பரமேஸ்வரா மற்றும் எம்பி பாட்டீல் ஆகிய இருவரும், தங்களுக்கும் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்றும், துணை முதலமைச்சராக சிவக்குமார் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனையடுத்து, சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
ಅಖಂಡ ಕರ್ನಾಟಕ ಕಾತುರದಿಂದ ಕಾಯುತ್ತಿರುವ ಐತಿಹಾಸಿಕ ಘಳಿಗೆ ಬಂದಿದೆ. ನಾಳೆ ಕಂಠೀರವ ಕ್ರೀಡಾಂಗಣದಲ್ಲಿ ನಡೆಯಲಿರುವ ಪ್ರಮಾಣ ವಚನ ಸ್ವೀಕಾರ ಸಮಾರಂಭಕ್ಕೆ ಆಗಮಿಸುವಂತೆ ಎಲ್ಲರನ್ನೂ ಹೃದಯಪೂರ್ವಕವಾಗಿ ಸ್ವಾಗತಿಸುತ್ತಿದ್ದೇನೆ. pic.twitter.com/bZ0Wiic1uY
— DK Shivakumar (@DKShivakumar) May 19, 2023
மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!
அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநில காங்கிரஸில் பலருக்கு அதிருத்தி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுகு பதிலளித்த கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான டி.பி.ஜெயச்சந்திரா, துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டதால் எம்பி பாட்டீல் மற்றும் ஜி பரமேஸ்வரா வருத்தத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆனால், டி.கே.சிவகுமாரை மட்டும் துணை முதல்வராக்க வேண்டும் என்பது கட்சியின் உயர்க்கட்டளையின் முடிவு. அதனால், இனிமேல் மாற்றங்கள் ஏதும் ஏற்படும் என்று நினைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
#WATCH | Bengaluru: "No, it is a decision of the high command to make DK Shivakumar the only Deputy Chief Minister. So, I don't think other things will rise," says #Karnataka Congress MLA and former State Minister, TB Jayachandra on reports of MB Patil and G Parameshwara being… pic.twitter.com/lxLQS9lYYc
— ANI (@ANI) May 19, 2023
லிங்காயத் சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி
லிங்காயத் சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி இல்லையா என மூத்த தலைவர் எம்பி பாட்டீல் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் நீண்ட ஆலோசனைகளுக்கு பின் தேர்வாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், மாநில ஆளுநரும் ஆட்சி அமைக்க முறைப்படி காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மே 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். இதனால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜி.பரமேஸ்வரா
71 வயதாகும் ஜி.பரமேஸ்வரா, குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தார். கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 8 ஆண்டுகாலம் பதவி வகித்த ஜி.பரமேஸ்வரா, காங்கிரஸ் மேலிடத்தின் கருத்து வேறானது. தலித்துகளின் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கட்சியில் தலித்துகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால், ஏற்படும் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும், எனவே, நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு வருந்தி பயனில்லை என பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கட்சியில் முக்கியமான ஒருவரின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில். லிங்காயத் சமூகத்துக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மூத்த தலைவர் எம்பி பாட்டீல் கடும் அதிருப்தியில் உள்ளார்.
ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்கு வாக்களித்துள்ள முஸ்லிம்கள், துணை முதல்வர் பதவி மற்றும் 5 முக்கிய துறைகளுடன் அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறவிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ