புது டெல்லி: இந்தியாவின் சுகாதார அமைப்பு கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, குறைவான ஆபத்து எனக் கருத்தப்படும் ஆன்லைன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஆலோசிக்க மருத்துவர்கள் செல்கின்றனர். அதே நேரத்தில் தெற்காசிய பொருளாதாரம் நாடு தழுவிய லாக் டவுனில் இருந்து வெளிவரத் தயாராகிறது.
மருத்துவமனை அல்லது கிளிக்குகளுக்கு அழைத்தால் தொற்றுநோய்க்கான ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால், பல மருத்துவர்கள் வழக்கமான தொலைபேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மூலமும் பணியை செய்து வருகின்றனர். மேலும் நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக நிலைமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இது போன்ற வழிகளை பின்பற்றி வருகின்றனர்.
லாக் டவுன் நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வர இயலாது. ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவர்களின் கடமை என்று புதுடெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையின் உள் மருத்துவ இயக்குநர் சுஷிலா கட்டாரியா கூறினார்.
கிட்டத்தட்ட 80% நோயாளிகளுக்கு ஆன்லைனில் சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளதாக கட்டாரியா கூறினார். உடல் பரிசோதனைகள் அவசர நிகழ்வுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும். மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து உலகின் கடுமையான லாக் டவுன் இருந்தபோதிலும், இந்தியாவின் வைரஸ் தொற்று எண்ணிக்கை 165,000 க்கும் அதிகமாக இருந்தது. இதில் 4,706 பேர் இறந்துள்ளனர்.
இந்த வைரஸ் பரவலானது பல மருத்துவமனைகளை பின்தங்க வைத்துவிட்டது. ஏற்கனவே படுக்கைகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையால் அல்லாடி கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் அல்லாத நோயாளிகளிடமிருந்தும், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் கவனத்தைத் திசை திருப்புகிறது.
இயல்பான காலங்களில் கூட அதன் சுகாதார முறை நீடித்த நிலையில், இந்தியா இணைய ஆலோசனைகளுக்கான உந்துதலில் டெலிமெடிசின் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
நோயாளிகள் ஆன்லைனில் அப்பொய்ன்மெண்ட்களை பதிவுசெய்து முன்கூட்டியே பணம் செலுத்தலாம், தொற்றுநோய்க்கு முன்பே இலவச ஆலோசனைகளை பின்பற்றுதல், மேலும் இப்போது இந்த செயல்முறையை முறைப்படுத்த உதவுகிறது.
வீட்டிலிருந்து சிகிச்சை அளிப்பது சிலர் விரும்புகிறார்கள். உண்மையில் மருத்துவரைப் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள மிகவும் பயப்படுகின்றனர். மருத்துவமனை வந்தால் தனக்கும் தொற்றுநோயைப் பற்றிக்கொள்ளும் என்ற பயம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
(மொழியாக்கம் அருள்ஜோதி அழகர்சாமி)