வர்த்தக உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ZEEL-Sony இணைப்பு உறுதியானது!

இரண்டு முன்னணி ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைப்பு  (ZEEL-SONY MERGER)  ஊடக துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்கிறார் ZEEL நிறுவன CEO புனித் கோயங்கா. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2021, 10:50 AM IST
  • ZEEL - SONY இணைப்புக்குப் பிறகு, சோனி பிக்சர்ஸ் பெரும்பான்மை பங்குகளை கொண்ட பங்குதாரராக இருக்கும்.
  • 190 நாடுகள் , 10 மொழிகள், 100க்கும் மேற்பட்ட சேனல்கள் கொண்டது ZEE நிறுவனம்
  • இந்தியாவில் தனது இருப்பை அதிகரிக்க சோனி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்.
வர்த்தக உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ZEEL-Sony இணைப்பு உறுதியானது!  title=

ZEEL மற்றும் Sony நிறுவனங்களின் இணைப்பு நடைமுறை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கடந்த மாத இறுதியில் ZEEL நிர்வாக இயக்குநர் புனித் கோயங்கா தெரிவித்திருந்த நிலையில், Sony Pictures Networks India Private Limited (SPNI) மற்றும் Zee Entertainment Enterprises Ltd. (ZEEL) ஆகியவற்றின் லீனியர் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துக்கள், உற்பத்தி செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை இணைப்பதை உறுதிபடுத்தும் ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

இது குறித்து ZEEL நிறுவன CEO புனித் கோயங்கா (Punit Goenka, Managing Director and Chief Executive Officer) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு முன்னணி ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைப்பு  (ZEEL-SONY MERGER) ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். மகத்தான வாய்ப்புகள் நிறைந்த பொழுதுபோக்குகளின் துறையில், அடுத்த சகாப்தத்தை நோக்கிய வெற்றி பயணத்திற்காக இரு நிறுவனங்களும் கைகோர்க்கிறது. ZEEL, SPE மற்றும் SPNI நிறுவனங்களை சேர்ந்த குழுவின் முயற்சிகளுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ZEEL - SPNI மெகா இணைப்பின் முக்கிய விஷயங்கள்

- ஜீ என்டர்டெயின்மென்ட்-சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைப்பை ZEEL போர்ட் அங்கீரித்துள்ளது.

- நிறுவனக்களின் இணைப்பிற்குப் பிறகு, புனித் கோயங்கா புதிய நிறுவனத்தின் MD & CEO ஆகத் தொடர்வார்.

- நிறுவனங்கள் இணைந்த பிறகு சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் $157.5 கோடி முதலீடு செய்யும்.

- முதலீட்டுத் தொகை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

- இணைப்புக்குப் பிறகு, சோனி பிக்சர்ஸ் பெரும்பான்மை பங்குகளை கொண்ட பங்குதாரராக இருக்கும்.

- இணைப்புக்குப் பிறகு இந்நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

ALSO READ | ZEEL-Sony இணைப்பு இறுதி கட்டத்தில் உள்ளது: புனித் கோயங்கா

இணைப்பு மற்றும் புதிய முதலீட்டிற்குப் பிறகு பங்குகளில் மாற்றம்

- தற்போது, ZEEL நிறுவன பங்குதாரர்களின் பங்கு 61.25% ஆக உள்ளது.

- $157.5 கோடி முதலீட்டிற்குப் பிறகு பங்குகளில் மாற்றம் இருக்கும்.

- சோனி நிறுவனத்தின் முதலீட்டிற்குப் பிறகு, ZEEL நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு சுமார் 45.15% ஆக இருக்கும்.

- சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களிடம் 50.86% பங்குகள் இருக்கும்.

ZEEL-SONY ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்

- ZEEL வளர்ச்சி மூலதனத்தைப் பெறும்.

- பரஸ்பரம் உள்ளடக்கம், டிஜிட்டல் தளங்களுக்கு அணுகல்.

- இந்தியாவில் தனது இருப்பை அதிகரிக்க சோனி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்கும்.

- சோனி நிறுவனம் 130 கோடி பார்வையாளர்களைப் பெறும்.

ZEEL நிறுவனத்தின் வணிகம்

- 190 நாடுகள் , 10 மொழிகள், 100க்கும் மேற்பட்ட சேனல்கள்.

-  பார்வையாளர்களில் 19% சந்தை பங்கு.

-  2.6 லட்சத்திற்கும் அதிகமான மணிநேரம் என்ற அளவில் டிவி உள்ளடக்கம்.

- 4800 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் டைட்டில்கள்.

- ZEE5 மூலம் டிஜிட்டல் துறையில் பெருமளவிலான பார்வையாளர்கள்.

- நாட்டில் 25% திரைப்படங்கள் ZEE நெட்வொர்க்கில் பார்க்கப்படுகின்றன.

சோனி வணிகம்

- இந்தியாவில் 31 சேனல்கள், 167 நாடுகளில் பார்வையாளர்கள்.

- சோனிக்கு நாட்டில் 70 கோடி பார்வையாளர்கள் உள்ளனர்.

- பார்வையாளர்களில் 9% சந்தை பங்கு.

ALSO READ | ZEEL-Sony Merger: இணையும் இரு மீடியா ஜாம்பவான்கள், முக்கிய அம்சங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News