COVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்

நாட்டில் கொரோனா முதலாவது அலை, மூத்த குடிமக்களை அதிகம் பாதித்த நிலையில், பின்னர் வந்த இரண்டாது அலை இளைஞர்கள் நடுத்தர வயதினரை பெரிதும் பாதித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2021, 12:05 PM IST
  • கொரோனா வைரஸ் தொடர்பாஅன் ஐந்து எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்காணித்தல்.
  • பெற்றோர்களுக்கு தடுப்பூசி தவறாமல் போடுதல் அவசியம்.
  • வேறு நோய்கள் ஏதெனும் இருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது
COVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் title=

நாட்டில் கொரோனாவின் (Coronavirus) முதலாவது அலை, மூத்த குடிமக்களை அதிகம் பாதித்த நிலையில், பின்னர் வந்த இரண்டாது அலை இளைஞர்கள் நடுத்தர வயதினரை பெரிதும் பாதித்தது. இந்நிலையில், மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில்,ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 11, 2021) கோவிட் -19 தொற்றுநோய்களின் போது குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியது.

 

இது குறித்த அறிக்கையில் “தொற்றுநோயானது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு நடவடிக்கைகள் (வரும் முன் காத்தல்) ஆகும், ”என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள, 58 பக்க ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

மாஸ்குகளின் பயன்பாடு, யோகா பயிற்சி செய்வது, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றின் மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். ஐந்து நோய் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்காணித்தல் மற்றும் பெற்றோருக்கு தடுப்பூசி போடுவது ஆகியவை ஆவணத்தில் செய்யப்பட்ட முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.

"குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது, ஆனால் கொரோனா வைரஸ் பல திரிபுகள் உருவாகி வருகின்றன என்பதால், அதன் பாதிப்பிலிருந்து தப்புக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்" என்று ஆவணம் கூறுகிறது.

ALSO READ | TN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று

உடல் பருமன், டைப் -1 நீரிழிவு நோய் அல்லது நோயெதிர்ப்பு குறைவாக உள்ள, அல்லது வேறு நோய்கள் ஏதெனும் இருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான  ஆபத்து அதிகம் உள்ளது என ஆயுஷ் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் ஆவணம் வெளியிட்டுள்ள ஆவணத்தை முழுமையாக காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இனைப்பை கிளிக் செய்யவும்

Direct link to Ayush Ministry’s document

"கோவிட் -19  தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதலானது (add-on to present contemporary line of management) சிகிச்சைக்கான  மாற்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று அந்த ஆவணத்தில் உள்ள மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் அங்கீகரப்பட்ட ஆயுஷ் மருத்துவரை கலதோசிக்க வேண்டும் எனவும், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும், அனைத்து குழந்தைகளும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.  

Also Read | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News