ரயில்வே மருத்துவமனைகளில் உள்ள ஆயுஷ் அமைப்பை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை இரயில்வே அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி இரயில்வே நிலையங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவ சேவையினை மக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
தற்போதைய உடன்படிக்கையின் படி கிழக்கு இரயில்வேயில் பி.ஆர்.சிங் மருத்துவமனை, வடக்கு இரயில்வேயின் மத்திய இரயில்வே நிலையம், மேற்கு இரயில்வேயில் உள்ள ஜே.ஆர்.ஆர். மருத்துவமனை, தெற்கு இரயில்வேயின் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை மற்றும் வடகிழக்கு எல்லைப்புற ரயில் நிலையத்தின் மத்திய மருத்துவமனை என 5 இரயில்வே நிலையங்களில் ஆயுஷ் மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் ரயில்வே மற்றும் ஆலோசகர் டாக்டர் மனோஜ் நெசாரியின் சார்பாக பிரதம நிறைவேற்று இயக்குநர் / சுகாதார டாக்டர் கஜேந்திர குமார் கையெழுத்திட்டார்.
நிகழ்ச்சியின் போது பேசிய ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், ரயில்வே ஊழியர்களின் பிரதான கவலை நீங்கியுள்ளது என குறிப்பிட்டார்.
அய்யூஷ் மருத்துவ முறையின் பாரம்பரிய குறிப்பு தொடர்பாக ரயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டும் எனவும், குறிப்பாக கடம் வேலை சுமைகளில் தவிக்கும் ஊழியர்களுக்கு அவர்களின் சோர்வை குறைக்கு இவ்வாறு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்!