Sweet Taste But Bitter To Health : அறுசுவைகளில் இனிப்பு சுவையே பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், அது ஆரோக்கியமானது என்ற இடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கும் காலம் இது. ஏனென்றால், இன்று நாம் உண்ணும் உணவுகளில் சேர்க்கப்படும் இனிப்பானது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகவே இருப்பதால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக மாறிவிட்டது தான்.
இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நுகர்வு உடலில் இன்சுலின் சுரப்பை சீர்குலைக்கிறது. நீரிழிவு போன்ற நோய்களைத் தவிர்ப்பதற்கு இன்சுலின் உற்பத்தி அவசியம், இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும்போது, நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய் மக்களிடையே அதிகரிக்க சர்க்கரை பயன்படுத்துவதே காரணமாக இருக்கிறது.
கொழுப்பையும் குளுக்கோஸையும் உடலின் ஆற்றலாக மாற்றுவதற்கு இன்சுலின் சுரப்பு அவசியம். ஆனால் சரக்கரை பயன்படுத்துவது அதிகரிக்கும்போது கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் இரண்டும் உடலில் அதிகரித்து, எடை அதிகரிப்பதற்கும் இறுதியில் உடல் பருமன் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
சர்க்கரை உண்பதை நிறுத்த வேண்டும் என்பதும், அதுவும் நிரந்தரமாக இருப்பது நல்லது என்றும் ஆய்வுகள் பலவும் அறிவுறுத்துகின்றன. உண்மையில், சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்க்கத் தொடங்கினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவாக இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
இயற்கை சர்க்கரைக்கும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பழங்கள், பேரீச்சம்பழங்கள் அல்லது பிற ஆரோக்கியமான மூலங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரையானது, உடல் ஆற்றலுடன் இயங்கவும் எடை இழப்புக்கும் நல்லது. ஆனால், வெள்ளை சர்க்கரை (சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை) உடலை சீர்குலைக்கிறது.
உடல் பருமன்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்தும். வெள்ளை சர்க்கரையில் நிறைய கலோரிகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் எடையைக் கூட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், அவற்றை சாப்பிடுவதை நிறுத்தினால், கூடிய உடல் எடையை குறைக்க உதவும்.
நீரிழிவு கட்டுப்படும்
உணவில் சர்க்கரையை தவித்தால், டைப்-2 நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து உடல் விடுபடத் தொடங்கும். நோயை முற்றிலுமாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம். இன்சுலின் உற்பத்தி அதிகரிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பெறலாம்
பளபளப்பான கூந்தல் சாத்தியப்படும்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வதால், சருமமும் கூந்தலும் மோசமாகிறது. வெள்ளை சர்க்கரையை தவிர்த்தல், உடலின் நச்சு நீக்கும் வேலைகள் உந்துதல் பெற்று ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை மீண்டும் பெறலாம்.
கொழுப்பு குறையும்
சர்க்கரை கலந்த உணவுகள், எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, எச்டிஎல் அல்லது நல்ல கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். நீங்கள் சர்க்கரை சேர்த்த பானங்கள் பருகுவதை நிறுத்தினால், உடல் கொழுப்பின் அளவை சிறப்பாகச் நிர்வகிக்கலாம். உடலின் கெட்ட கொழுப்பை குறைக்க சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கவும்.
நோய் அபாயங்கள் குறையும்
சிறுநீரக பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் கண் ஆரோக்கியம் ஆகியவற்றின் அபாயங்களை அதிகரிக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கத் தொடங்கினால், நோய் அபாயங்கள் குறைந்துவிடும்.
சர்க்கரை உடனடி ஆற்றலைத் தருகிறது ஆனால் அது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். சர்க்கரை கொடுக்கும் ஆற்றல் முடிந்தவுடனே சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். சர்க்கரையை குறைப்பது இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும். எனவே இனிப்பு சுவையை விலக்க வேண்டாம், ஆனால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நுகர்வை நிறுத்துங்கள்
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ