நரம்பு பலவீனம் ஏற்பட காரணம் என்ன? இந்த வைட்டமின்களின் குறைபாடு ஆபத்தாகலாம்

Reasons for Nerve Weakness: நரம்பு பலவீனம் ஏற்பட்டால், முதலில் கால்களிலிருந்து வலி தொடங்குகிறது. பின்னர் மெதுவாக வலி முதுகுத்தண்டு மற்றும் தொடைகளிலும் படர்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2024, 12:52 AM IST
  • நரம்புகளை வலுப்படுத்த, காலை உணவில் முட்டை, மீன், பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்.
  • இது தவிர, முடிந்தவரை அதிக காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
  • அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நரம்பு பலவீனம் ஏற்பட காரணம் என்ன? இந்த வைட்டமின்களின் குறைபாடு ஆபத்தாகலாம் title=

Reasons for Nerve Weakness: நரம்பு பலவீனம் என்பது பலரிடம் பரவலாக இருந்தாலும், இதைப் பற்றிய புரிதல் பலருக்கு இருப்பதில்லை. இதற்கான காரணம் மற்றும் அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லாததால், இது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரிக்கின்றது. நரம்பு பலவீனம் ஏற்பட்டால், முதலில் கால்களிலிருந்து வலி தொடங்குகிறது. பின்னர் மெதுவாக வலி முதுகுத்தண்டு மற்றும் தொடைகளிலும் படர்கின்றது. இது தவிர, நரம்பு நோய் சில நேரங்களில் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளையும் அடையலாம். இது தவிர, இதனால் உடலின் பல பாகங்களும் பாதிக்கப்படலாம். நரம்பு பலவீன உடலில் ஏதேனும் வைட்டமின் குறைபாடு காரணமாக ஏற்படலாம். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

பலவீனமான நரம்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின்கள்

நியூரோட்ரோபிக் பி வைட்டமின்கள் நரம்பு மண்டலத்தில் கோஎன்சைம்களாக செயல்படுகின்றன. இவை அவற்றை உள்ளே இருந்து ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதில் வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) மற்றும் வைட்டமின் பி12 (கோபாலமின்) ஆகியவை நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகின்றன. 

வைட்டமின் பி1 (தியாமின்)

வைட்டமின் பி 1 (தியாமின்) என்பது கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றும், நரம்பு செல்களுக்கு ஆற்றலை வழங்கும் வைட்டமின் ஆகும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, உடலின் அனைத்து நரம்புகளுடனும் அதன் இணைப்பை மேம்படுத்துகிறது. இது தவிர, இந்த வைட்டமின் நரம்புகள் எப்போதும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது. ஆகையால் நரம்புகளை வலுப்படுத்த வைட்டமின் பி 1 (தியாமின்) குறைபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை வலுவாக்கும் அற்புத பானங்கள்: குடித்தால் குஷியாக வாழலாம்

வைட்டமின் B6 (பைரிடாக்சின்)

வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின் ஆகும். இந்த வைட்டமின் மனிதர்களின் மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்து உடலுடன் அவற்றின் தொடர்பை மேம்படுத்துகிறது. உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், வலிப்புத்தாக்கங்கள் வரக்கூடும். ஆகையால் இந்த வைட்டமின் குறைபாட்டை தவிர்ப்பது மிக அவசியமாகும். 

வைட்டமின் பி12 (கோபாலமின்)

வைட்டமின் B12 (கோபாலமின்) குறைபாடு இருந்தால், நரம்புகள் குறுகுவதில் சிக்கல் ஏற்படுகின்றது. மேலும் சில நேரங்களில் நரம்புகளின் செயல்பாடு கடினமாகிறது. இது தவிர, அதன் குறைபாடு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. இது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பலவீனமான நரம்புகளை வலுப்படுத்தும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும். 

- நரம்புகளை வலுப்படுத்த, காலை உணவில் முட்டை, மீன், பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். 

- இது தவிர, முடிந்தவரை அதிக காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

- அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

- இதன் மூலம் நோய் கட்டுக்குள் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடாவடி கொலஸ்ட்ராலை குறைக்க அற்புதமாய் உதவும் அசத்தும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News