முட்டை மிகச்சிறந்த உணவு என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனக் கூறுவார்கள். அது முட்டைக்கும் பொருந்தும்.
முட்டைகளை (Egg) சாப்பிடுவது எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், மேலும் இது சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் அதை வேகவைத்து, ஆம்லெட் செய்து அல்லது வேறு விதமாக தயாரித்து, சுவையாக சாப்பிடலாம். இது உணவு பாடி பில்டர்களுக்கு மிகச்சரியான உணவு.
இத தயாரிப்பதும் மிகவும் எளிது. அதனால், இந்த மக்கள் இதை அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் முட்டையில் காணப்படுகின்றன, ஆனால் அதிக முட்டையை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும் படிக்க| டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!!
நீங்கள் அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனா மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீங்கள் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிட்டால், அது நீரிழிவு நோய்க்கான ஆபத்தை 60 சதவீதம் அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
தினமும் 38 கிராம் எடை அளவிலான முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை சுமார் 25 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக அளவில் முட்டை சாப்பிட்டு வந்தால், இந்த ஆபத்து 60 சதவீதமாக அதிகரித்தது. உணவுப் பழக்கத்திற்கும் டைப் -2 நீரிழிவு நோய்க்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயை சரியான உணவு பழக்கத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு அறிக்கையில் உலகெங்கிலும் சுமார் 6 சதவீத மக்கள் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயின் அபாயத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும்
பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கீரை, பாகற்காய், ப்ரோக்கோலி, கேரட் போன்றவை மிகவும் நல்லது. இந்த உணவுகள் அனைத்தும் நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் இதயத்தையும் கண்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், மக்காச்சோளம், சேனைக்கிழங்கு, பட்டாணி, தர்பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பல வித நோய்களுக்கு அருமருந்தாகும் தேங்காய்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR