எந்த ஊட்டச்சத்து குறைந்தால் இந்த அறிகுறிகள் வரும்? இது மகளிர் மட்டும் ஸ்பெஷல்

Nutrient Deficiency Diet: உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள் எவை என்பது ஓரளவு அனைவருக்கும் தெரியும் என்றாலும், குறிப்பாக பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்ன? அவை குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 07:21 PM IST
  • உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள்
  • பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
  • ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்
எந்த ஊட்டச்சத்து குறைந்தால் இந்த அறிகுறிகள் வரும்? இது மகளிர் மட்டும் ஸ்பெஷல் title=

மகளிர் ஆரோக்கியம்:  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சாப்பிடுவதற்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் உண்மையில் உணவில் இருந்து தவிர்க்கக்கூடாத ஊட்டச்சத்துக்கள், ஆண்களைவிட பெண்களுக்கு மிகவும் தேவையானது. ஏனெனில் உடல் அமைப்பு மற்றும் கருவுறுதல், மாடவிடாய், தாய்ப்பால் கொடுப்பது என ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு ஊட்டச்சத்து தேவை அதிகமாக இருந்தாலும், பொதுவாக இந்த அத்தியாவசியத் தேவை புறக்கணிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் எளிமையானதாகத் தெரிகிறது, ஆனால் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் உண்மையிலேயே பெறுகிறீர்களா? ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகள் பெண்களை எந்த அளவு பாதிக்கும் என்பது தெரியுமா?  

இரத்த சோகை, முடி உதிர்வது, கால் வலி, தசைப் பிடிப்பு, அடிக்கடி சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுவது என பெண்களில் பலரும் கவலைகளை தெரிவிக்கின்றனர். இப்போது சொன்னவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் கூட, அது நீங்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு பெறவில்லை என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் போதுமான அளவு உட்கொள்வதே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!! 

கால்சியம்
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளில் முக்கியமானது கால்சியம் சத்து குறைவது ஆகும். உங்கள் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருந்தால், உங்கள் எலும்புகள் குறைந்து ஆஸ்டியோபீனியா ஏற்படும். விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, உடல் பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் அசாதாரண இதயத் துடிப்பு ஆகியவை கால்சியம் குறைபாட்டின் மற்ற அறிகுறிகள் ஆகுக்ம்.

அயோடின்
அயோடின் குறைவு ஏற்பட்டால் பலவீனம், சோர்வு, குளிர்வது போன்ற உணர்வு, தோல் வெளுத்துப் போவது, மூச்சுத் திணறல், நகங்கள் உடைவது மற்றும் முடி உதிர்தல் என பல அறிகுறிகள் தோன்றும்.
 
இரும்புச்சத்து
உடல் பலவீனம், சோர்வு, தோல் வெளுத்துப் போவது, மூச்சுத் திணறல், நகங்கள் உடைவது மற்றும் முடி உதிர்தல் என பலவிதமான அறிகுறிகள், உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து  இல்லையென்றால் ஏற்படும்.

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ குறைவு சிறிதளவு ஏற்பட்டாலும், உடல் சோர்வு ஏற்படும். நோய்த்தொற்றுகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விட்டமின் ஏ குறைபாடு மிகவும் தீவிரமானால், மாலைக் கண் நோய், கடுமையான கண் வறட்சி, தோல்கள் வறண்டு போவது முடி உதிர்வது என அறிகுறிகள் தீவிரமாகும்.

வைட்டமின் பி12
பலவீனம், சோர்வு, நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், மெகாலோபிளாஸ்டிக் அனீமியா, டிமென்ஷியா, ஞாபக மறதி ஆகியவை விட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படும். 

எனவே, ஆரோக்கியத்தை பாதுகாக்க, இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை, உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News