மஞ்சளை உட்கொள்வது நமக்கு மிகவும் நன்மையை தரும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சளால் பாதிக்கப்படுபவர்கள் நம்மில் பலர். எந்தெந்த நபர்கள் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது என்பதை இன்று நாம் இங்கே காண உள்ளோம். இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை நாமும் சந்திக்க நேரிடும்.
சிறுநீரகக் கல் நோயாளிகள்: கல் உள்ளவர்கள் மஞ்சளை (Turmeric) உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உண்மையில், அடிக்கடி கல் பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வது இந்த பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, அவர்கள் மஞ்சளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது நல்லது.
ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், ரத்தத்தை மெல்லியதாகவும் மாற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள இரத்தத்தின் அளவை இன்னுமும் குறைக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.
அழற்சியை உண்டாக்கும்: மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது உங்களுக்கு தடிப்புகள், வெடிப்புகள் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். இது சரும அழற்சி போன்றவற்றை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
குமட்டல்: மஞ்சளில் காணப்படும் குர்குமின் வயிற்று மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிலும் வெந்நீரில் சேர்த்துக் குடிக்கின்ற பொழுது, அதில் உள்ள துவர்ப்புத் தன்மை குமட்டலை ஏற்படுத்தும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை சாப்பிடக்கூடாது. இந்நோயில் இருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.
ALSO READ | Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR