உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த காலை உணவுகளை சாப்பிடுங்க... கச்சிதமா குறைக்கலாம்

Weight Loss Tips: காலை உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், நமது எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அந்த உணவுகளின் விவரங்களை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2023, 06:42 AM IST
  • கஞ்சி எப்போதும் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.
  • இது எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.
  • கஞ்சியை காய்கறிகள் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த காலை உணவுகளை சாப்பிடுங்க... கச்சிதமா குறைக்கலாம் title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. எனினும் மிக கடினமாக உழைக்காமல் பல எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைக்கும் உணவு (Weight Loss Diet): 

இந்தியாவில் சுவையான உணவுகளுக்கோ அல்லது அதை விரும்புபவர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால், ருசிக்கு பின்னால் சென்று ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது படிப்படியாக நம் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு (Belly Fat) சேர்ந்தவுடன், அதைக் குறைப்பது மலையைச் சுமப்பது போல் கடினமாகிவிடும். சிலர் உடல் எடையைக் குறைக்க உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதைக் குறைக்கிறார்கள், ஆனால் இது உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவைக் குறைப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், காலை உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், நமது எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும் என்று கூறுகிறார். அந்த உணவுகளின் விவரங்களை பற்றி இங்கே காணலாம்.

காலை உணவாக இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறையும் (Weight Loss Breakfast) 

1. ஓட்ஸ் (Oats) 

ஓட்ஸ் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. அதன் உதவியுடன் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைப்பது (Weight Loss) மட்டுமல்லாமல், இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல், எடையும் சீராக இருக்கும்.

மேலும் படிக்க | 2023ல் உலகை அச்சுறுத்திய 4 நோய்த்தொற்றுகள்! 2024 ஆம் ஆண்டிலும் கவனம் தேவை

2. பலதானிய மாவு சப்பாத்தி அல்லது ப்ரெட் (Multigrain Roti)

நீங்கள் காலையில் கோதுமை மாவு சப்பாத்தி அல்லது வெள்ளை ப்ரெட் சாப்பிடுகிறீர்கள் என்றால், உடனடியாக இந்த பழக்கத்தை மாற்றவும். ஏனெனில் பல தானிய மாவு பொருட்கள் இதை விட சிறந்தவை. மல்டிகிரேன் சப்பாத்தி அல்லது அதன் பிரெட் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் ஃபிட்னஸ் நல்ல நிலையில் இருக்கும்.

3. கஞ்சி

கஞ்சி எப்போதும் ஆரோக்கியமான காலை உணவாகக் (Breakfast) கருதப்படுகிறது, இது எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. கஞ்சியை காய்கறிகள் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். இது நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது எளிதில் செரிமானமாகும், எனவே இது எடையை அதிகரிக்காது. புழுங்கல் அரிசி, கோதுமை ரவை, சத்து மாவு ஆகியவற்றில் கஞ்சி செய்து உட்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இதய தமனிகளில் அடைப்பு உள்ளதை உணர்த்தும்... சில ஆபத்தான அறிகுறிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News