பலர் பூண்டு பால் குடிப்பதை நீங்கள் பார்திருப்பீர்கள். ஏனெனில் பூண்டுடன் பால் கலந்து குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நாட்டு மருத்துவத்தில் கூறப்பட்டு வருகிறது. மறுபுறம் சிலருக்கு இவ்வாறு குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் சந்திக்க நேரிடலாம். ஏனெனில் பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாலுடன் சேரும் போது இவை ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இப்போது நாம் பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.
கல்லீரல் பாதிப்பு
பூண்டுடன் பால் குடிப்பது கல்லீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஏனெனில் பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது இவை கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும், எனவே பூண்டை பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் இருந்தால் இவ்வளவு ஆபத்தா? ஜாக்கிரதை!
ஸ்கின் அலர்ஜி
பூண்டுடன் பால் கலந்து குடித்தால் ஸ்கின் அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படக்கூடும். பூண்டில் உள்ள சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும். இதன் காரணமாக, தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படலாம்.
இரத்த அழுத்தம்
பூண்டுடன் பால் குடிப்பதால் இரத்த அழுத்தம் மோசமடையும். ஏனெனில் பூண்டு பால் சில நேரங்களில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
வயிற்றுப்போக்கு
பூண்டு பால் குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதேபோல் வாயு பிரச்சனையும் ஏற்படக்கூடும். ஏனெனில் பூண்டில் நார்ச்சத்து உள்ளது, அதனுடன் பால் கலந்து குடிப்பது சில நேரங்களில் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் இந்த இரண்டையும் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
தலைவலி
பூண்டு பால் குடிப்பதால் தலைவலி ஏற்படலாம். பூண்டு மற்றும் பால் இரண்டும் தலைவலிக்கு காரணம் இல்லை என்றாலும், இந்த இரண்டு கலவை ஒன்றாக குடிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனைக்கு தீர்வைத் தரும் ‘மேஜிக்’ டீ! தயாரிப்பது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ