வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழைத்தண்டு... சந்தோஷமா சாப்பிடுங்க!

Health Benefits Of Banana Stem: வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, பூ, பழம் உள்ளிட்ட அனைத்தும் உடலுக்கு மிக மிக ஆரோக்கியத்தை அளிக்கும் நிலையில், வாழைத்தண்டின் நன்மைகள் குறித்து இதில் காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2023, 01:52 PM IST
  • வாழைத்தண்டில் நிறைய நார் சத்து உள்ளது.
  • இதனை நீங்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி சாப்பிடலாம்.
  • செரிமானத்திற்கு மிக மிக நல்லது
வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழைத்தண்டு... சந்தோஷமா சாப்பிடுங்க! title=

Health Benefits Of Banana Stem: வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளுடந் நிரம்பியுள்ளது. வாழை இலையில் உணவு சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகம். வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ளது. மேலும் நீரிழிவு மற்றும் வயதான தோற்றத்தை தவிரப்பதற்கு வாழைப்பூ நல்லது. அதே போல, வாழைத் தண்டிலும் அற்புதமான பலன்கள் நிரம்பியிருப்பதில் ஆச்சரியப்படவேண்டுமா என்ன. இங்கு வாழைத் தண்டில் உள்ள சில முக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.

நச்சு நீக்கம் மற்றும் செரிமானம்

வாழைத்தண்டு சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது ஒரு டையூரிடிக் ஆகும். மேலும் உங்கள் உடலமைப்பை நோய்களில் இருந்து சுத்தப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். வாழைத்தண்டு சாறு செரிமானத்திற்கு சிறந்தது. இது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. உங்கள் குடலுக்கு நல்ல நார்ச்சத்தை அளிக்கும். 

சிறுநீரக கற்களை நீக்கும்

வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காயை கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ப்பை தளர்வதோடு, சிறுநீரக கற்கள் வலி ஏற்படாமல் தடுக்கிறது. தினமும் ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாற்றில், எலுமிச்சை சாறின் சிறு துளிகளை கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் (UTI) ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை திறம்பட போக்க உதவுகிறது.

மேலும் படிக்க | இதய நோயின் தீவிர அறிகுறிகள் - அலட்சியமாக இருக்காதீர்கள்

உடல் எடை இழப்பு

நார்ச்சத்துள்ள வாழைத்தண்டு, உடலின் செல்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் வெளியீட்டை குறைக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. அதனால், நீங்கள் இதை எவ்வித குற்ற உணர்ச்சியின்றி சாப்பிடலாம்.

கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்

வைட்டமின் பி6 நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது பொட்டாசியத்துடன் செறிவூட்டப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

இரைப்பை பிரச்சனைகளை குணப்படுத்தும்

உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால், வாழைத்தண்டு சாறு உங்கள் உடலில் அமில அளவைக் கட்டுப்படுத்தவும், சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியம் மற்றும் வயிற்றில் எரிவது போன்ற உணர்வுக்கு நிவாரணம் அளிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மடமடனு எடை ஏறுதா? இந்த சூப்பர் ட்ரிங்கை குடிங்க... சட்டுனு குறையும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News