மாரடைப்பு வராமல் தடுக்க... இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு பலியாகும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2024, 02:37 PM IST
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ரால் இதய தமனிகளில் சேருவதை தடுக்க உதவுகிறது.
  • இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சூப்பர் உணவுகள்.
  • மாரடைப்பு வராமல் தடுக்க டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.
மாரடைப்பு வராமல் தடுக்க...  இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்! title=

இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் உடலில் கெட்ட கொழுப்பின் (LDL  Cholesterol) அளவு கணிசமாக அதிகரிக்கிறது. அதனால் தான், முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்தியை அடிக்க கேட்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொழுப்பின் அளவை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது இதயத்தை மோசமாக பாதிக்கும் என்பதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். இப்படிப்பட்ட நிலையில், உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட சில ஆயுர்வேத வைத்தியங்களைப் (Ayurvedic Remedies For High Cholesterol) பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.  இங்கே குறிப்பிட்டுள்ள உணவுகள் சில நாட்களிலேயே, உடலின் நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றும். இது மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஆயுர்வேத வைத்தியத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பற்றி தெரிந்து கொள்வோம்...!

இஞ்சி - தேன்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதனை ஒத்த பல பண்புகள் தேனில் காணப்படுகின்றன, இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) இதய தமனிகளில் சேருவதை தடுக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் வெந்நீரில் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் ஆப்பிள் வினிகர் கலந்து குடிக்கலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக (Health Tips) வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இந்த கலவை உங்கள் உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

பூண்டு

பூண்டில் கந்தகம் உள்ள நிலையில், இது ரத்தத்தை மெலிதக்கி கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு 6-8 பூண்டு பற்களை அரைத்து ஒரு கப் பால் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த கலவை மிகவும் உதவுகிறது.

மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) உடைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. இதற்கு வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து இரவு தூங்கும் முன் சாப்பிடலாம். மஞ்சள் சுத்தமான ஆர்கானிக் மஞ்சளாக இருப்பது முக்கியம். கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த கலவை உதவியாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News