பூசணி விதைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கும்: நீங்கள் பூசணிக்காயை உணவில் பயன்படுத்தினால், அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீச வேண்டாம். ஏனெனில் அவை இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இந்த விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது தவிர பூசனி விதைகளுக்கு இன்னும் பல நன்மைகளும் உள்ளன. உறங்கும் முன் சில பூசணி விதைகளை சாப்பிடுவது விரைவாக உறங்க உதவும். இவற்றை உட்கொள்வதால் மன அழுத்தமும் குறைகிறது. பூசணி விதைகள் பாலியல் பிரச்சனைகளால் சிரமப்படுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உட்கொள்ளலாம்.
பூசணி விதைகளின் நன்மைகள்
- பல சரும பிரச்சனைகள் நீங்கும்
- எடை இழப்புக்கும் உதவுகிறது
- வயிற்றில் புழுக்கள் பிரச்சனை வராமல் தடுக்கும்
- உடலில் ரத்தப் பற்றாக்குறை இருக்காது
- மன ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்
- சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்
- சிறுநீர் அடங்காமை, யுடிஐ போன்ற பிரச்சனைகளை நீக்கவும் உதவும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரியான வழி இது
- உயர் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது
மேலும் படிக்க | 30 ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சியை ஒரே பழத்தில் கொண்ட கனி
ஆண்களுக்கு நன்மை பயக்கும்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பூசணி விதைகள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு ஆராய்ச்சியின் படி, பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. இது அவர்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
புரோஸ்டேட் சுரப்பியை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான ஹார்மோன் செயல்முறையை மேம்படுத்தவும் பூசணி விதைகளை ஆண்கள் உட்கொள்ள வேண்டும். பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது, எனவே அவற்றை உட்கொள்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்.
பூசணி விதைகளை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
உலர்ந்த வறுத்த பூசணி விதைகளை காலை உணவாக சாப்பிடலாம். இது தவிர, நீங்கள் தூங்கும் முன் பூசணி விதைகளை உட்கொள்ளலாம். அதன் பலன் சில நாட்களிலேயே தெரியத் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகலவ்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | ஜூஸ் குடிச்சா இவ்வளவு நல்லதா! இனிமேல் உணவே பழச்சாறு தான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR