கோடையில் இன்சுலினாக செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ பானங்கள்!

கோடையில் நீரிழப்பைத் தவிர்ப்பதோடு, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சவாலாக உள்ள நிலையில், குறிப்பிட்ட 5 பானங்கள் நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனைக்கு தீர்வினைத் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 12:31 PM IST
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உணவுகள்.
  • எலுமிச்சைப்பழச் சாறு தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதிலாக கருப்பு உப்பு சேர்க்கவும்.
  • நீரிழிவு நோயாளிகள் அதிகபட்சமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடையில் இன்சுலினாக செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘சூப்பர்’ பானங்கள்! title=

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென எடை குறைதல், பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். கோடை காலத்தில் இது இன்னும் அதிகமாக இருக்கும். இது உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உணவுகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள பொருட்களை உட்கொள்வது நன்மை பயக்கும். அவை இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கின்றன. அதே சமயம், கோடைக்காலத்தில், உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் (Blood Sugar Control) அதே நேரத்தில் உடலை ஹைட்ரேட் செய்யும் பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது . அதே நேரத்தில், இவர்கள், குளிர் பானங்கள் மற்றும் பிற இனிப்பு பானங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. இவற்றில் சேர்க்கப்படும் இனிப்பு இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோடையில் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அந்த 5 பானங்களை அறிந்து கொள்ளலாம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் எலுமிச்சை நீர் 

கோடையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எலுமிச்சை தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் பிரச்சனைகள் ஏற்படும். அதனால், எலுமிச்சைப்பழச் சாறு தயாரிக்கும் போது சர்க்கரைக்குப் பதிலாக கருப்பு உப்பு சேர்க்கவும். உங்கள் ஆற்றலை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காது.

மேலும் படிக்க | நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘நாட்டு மருந்து பொடி’! வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த தண்ணீர் அதிகம் குடிக்கவும்

குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது மற்றும் நன்மை பயக்கும். கொளுத்தும் வெயிலிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கூடுதல் குளுக்கோஸை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் அதிகபட்சமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நன்மைகளைத் தரும் காய்கறி சாறு 

சர்க்கரை நோயாளிகள் கோடையில் பழச்சாறுக்கு பதிலாக காய்கறி சாறு குடிப்பது அதிக நன்மை பயக்கும். இதற்குக் காரணம் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை. இது சில சமயங்களில் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். காய்கறிகளின் சாறு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

சிறந்த மருந்தாக செயல்படும் இளநீர்

கோடையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாக செயல்படும். ருசியாக இருப்பது மட்டுமின்றி, பல சத்துக்கள் நிறைந்தது. இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பானங்களில் ஒன்றாகும். ஆற்றலைத் தருவதோடு, இரத்தச் சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது.

சிறந்த கோடைகால பானம் மோர் 

மோர் கிட்டத்தட்ட அனைவரது வீட்டிலும் தவறாது கிடைக்கும் பானம் எனலாம். கிராமத்தில் காலை, மதியம் என இரு வேளைகளிலும் இதை உண்ணுகின்றனர். வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்க அனுமதிக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த பானம். இதற்குக் காரணம், மோரில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புக்களே காணப்படுகின்றன.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நீரிழிவை ஓட விரட்டும் ‘கேழ்வரகின்’ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News