Healthy Hair Tips: நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 16, 2021, 03:47 PM IST
  • நரைமுடியை குறையும்
  • தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்
  • எளிதாக கிடைப்பவை
Healthy Hair Tips: நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள் title=

அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.

30 வயதை நெருங்கியவர்களுக்கு நரை முடி தோன்றுவது மிகப் பெரிய கவலையை கொடுக்கிறது. சிலருக்கு அது மன அழுத்தத்தையே கொடுக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?
நரை முடி உருவாகாமல் தடுப்பதற்கும், வளர்ந்த நரையை குறைக்கவும், நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். 

வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால் விரைவீல் நரைமுடி வந்துவிடும். எனவே, கடல் உணவுகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் நரைமுடி வருவது தள்ளிப்போகும்.  சைவ உணவை எடுத்துகொள்பவர்கள் மருத்துவரை அணுகிய பிறகு வைட்டமின் பி 12 உணவுகளை தேர்வு செய்யலாம்.

Also Read | Sea Foods: இளமையான தோற்றம் வேண்டுமா? இந்த உணவை சாப்பிடுங்க!

பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளர்ச்சிக்கு உதவும்.   பெர்ரி வகைகள், திராட்சை, கீரை வகைகள், காய்கறிகள், க்ரின் டீ போன்ற ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நரை முடி வருவது தள்ளிப்போகும். 

பெர்ரி பழங்களில் வைட்டமின் அதிகம் இருக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் கேரட், வைட்டமின்கள் பி மற்றும் செலினியம்,அயோடின், துத்தநாகம் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்த கறிவேப்பிலை ஆகியவை சுலபமாக கிடைப்பவை, விலையும் மலிவானவை. இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் தலை முடி உங்களுக்கு பிடித்தது போலவே இருக்கும்.

Also Read | காய் & பழங்களை ஏன் ஃப்ரிட்ஜில் ஒன்றாக வைக்கக்கூடாது தெரியுமா?

மெலனின் உற்பத்திக்கு உதவும்ம் கீரைகள், வைட்டமின் பி 12 நிறைந்திருக்கும் முட்டை ஆகியவையும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை. அதேபோல புரதத்தின் வளமான ஆதாரத்தைக் கொண்ட பீன்ஸ் வகைகள் தலைமுடிக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சூரியகாந்தி விதைகளில் இருக்கும் ஆகிஸ்ஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் கருகருவென கூந்தல் வளர உதவும்.

தாமிரத்தின் வளரமான ஆதாரம் கொண்ட அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது. தலைமுடி கருப்பாக இருக்கும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Also Read | கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News