இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சர்க்கரை நோய் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகும். ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். உணவில் காட்டும் சிறு அலட்சியம் கூட நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற சரியான புரிதல் இருப்பது அவசியமாகும். அதனுடன் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் அத்தகைய காயை பற்றி தான் இன்று நாம் இந்த கட்டுரையில் காணலாம்.
நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் வெள்ளரிக்காய் | Cucumber Benefits for Diabetic Patients:
கோடை காலத்தில் நாம் அதிக அளவில் வெள்ளரிக்காயை உட்கொள்கிறோம். ஏனெனில் வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் நீரிழப்பு பிரச்சனையை தவிர்க்கலாம். வெள்ளரிக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் வெள்ளரிகாயில் காணப்படுகின்றன. நீரிழிவு நோயில் வெள்ளரிக்காயை உட்கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உட்கொள்ளும் முறையை இப்போது தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
நீரிழிவு நோயில் வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது: வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை தரும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயாளிகளை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
2. இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்: வெள்ளரிக்காய் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். நார்ச்சத்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வெள்ளரிக்காய் உட்கொள்வது உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
3. குறைந்த கிளைசெமிக் குறியீடு: வெள்ளரிக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். வெள்ளரிக்காயில் உள்ள சேர்மங்கள் கார்போஹைட்ரேட்டுகளை எளிய சர்க்கரை வடிவங்களாக உடைப்பதைத் தடுக்கின்றன. இதனால் சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் ஸ்பைக்கைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை எப்படி உட்கொள்ள வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 சிறிய அளவிலான வெள்ளரிகளை சாப்பிடலாம். வெள்ளரிக்காயை சாலட் வடிவில் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதும் நன்மை பயக்கும். காலையில் வெள்ளரிக்காய் சாறு குடிப்பதாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ