புற்றுநோய் அபாயம்: இவற்றை தினசரி உணவில் சேர்த்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்

Cancer Prevention Foods: புற்றுநோய் நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2022, 06:29 PM IST
  • புற்றுநோய் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள்.
  • புற்றுநோயைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும்?
  • குங்குமப்பூவை உட்கொள்வதால் புற்றுநோய் நோய் வராமல் தடுக்கலாம்.
புற்றுநோய் அபாயம்: இவற்றை தினசரி உணவில் சேர்த்தால் புற்றுநோயை தவிர்க்கலாம்  title=

புற்றுநோய்க்கான காரணம்: உடலில் உள்ள எந்த உயிரணுவும் தொடர்ந்து அசாதாரணமாக வளரும் போது, ​​அது பெரிதாக வளர்ந்து புற்றுநோயாக மாறுகிறது. நம் உடலில் உள்ள செல்களின் உருவாக்கமும் அழிவும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உயிரணு உருவாகும் போது உடலால் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால், பின்னர் அது புற்றுநோயாக மாறுகிறது.

புற்றுநோயைப் பற்றி மிகவும் அச்சுறுத்தும் விஷயம் என்னவென்றால், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரிக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. மேலும் மோசமான செய்தி என்னவென்றால், புற்றுநோய் இப்போது தொடர்ந்து அதன் அபாயகரமான வடிவத்தைக் காட்டுகிறது. புற்றுநோய் 100 வகைகளுக்கு மேல் இருக்கலாம். இது ஒரு பரந்த தலைப்பு. இது தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. புற்றுநோய் நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகிறது.

புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி?

- புற்றுநோய்க்கான சிகிச்சை எந்த ஒரு தனி மனிதனின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஏனெனில் புற்று நோய்க்கான முக்கிய காரணம் நமது காற்று, நீர், மண், காய்கறிகள், பால், பழங்கள் என அனைத்திலும் உள்ள மாசுபடாகும். 

மேலும் படிக்க | கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்! இதோ வழிமுறை 

- தற்போது அனைத்திலும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக மகசூல் பெற பூச்சிக்கொல்லி வடிவில் ரசாயனங்கள் பயிர்கள் மீது தெளிக்கப்படுகின்றன. இது புற்றுநோயை உண்டாக்குகிறது. இந்த இரசாயனங்கள் பூமிக்குள் செல்கின்றன.

- மழைக்காலத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் ஆறுகளில் கலப்பதால், மாசு அதிகரித்து, நீர் மாசுபட்டு, ஆற்றில் வாழும் உயிரினங்கள் இறக்கின்றன.

- இந்த மண்ணில் வளரும் புல்களிலும் இந்த இரசாயனங்கள் உள்ளன. அவற்றை சாப்பிடுவதன் மூலம், பால் கறக்கும் விலங்குகளின் பாலிலும் இந்த ரசாயனங்களின் தாக்கம் உள்ளது.

- மொத்தத்தில், இயற்கை விவசாயம் மற்றும் எளிமையான வாழ்க்கை மூலம், புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களைத் தவிர்க்கலாம்.

புற்றுநோயைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும்?

- மஞ்சளை உட்கொள்ளலாம். மஞ்சளில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை அது தடுக்கிறது. தினமும் உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து பாலுடன் மஞ்சளை எடுத்துக் கொள்ளவும்.

- குங்குமப்பூவை உட்கொள்வதால் புற்றுநோய் நோய் வராமல் தடுக்கலாம். ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால், அவர் பால், பாயசம், புட்டு போன்ற உணவுப் பொருட்களில் குங்குமப்பூவை சேர்த்து உட்கொள்ளலாம். 

- அத்திப்பழத்தை பாலில் சமைத்து சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரவில் தூங்கும் முன் தினமும் ஒரு துண்டு அத்திப்பழத்தை உட்கொள்ள வேண்டும். பாலில் சமைத்து மென்று சாப்பிட்டு பாலை அருந்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Insomnia: தூக்கமின்மை பிரச்சனையா; சில எளிய வீட்டு வைத்தியங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News