மேல் தொப்பை கொழுப்பை குறைக்கும் டிப்ஸ்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், கடினமான வழிகளை பின்பற்றினால்தான் உடல் எடையை (Weight Loss) குறைக்க முடியும் என்றில்லை. பல எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். மேல் தொப்பை கொழுப்பை குறைக்கும் இயற்கையான வழிகளை இந்த பதிவில் காணலாம்.
மேல் தொப்பை கொழுப்பை அகற்ற 5 வழிகள்:
உடல் எடை குறைய: தண்ணீர் குடிக்கவும்
போதுமான அளவு தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால், பல வாழ்க்கை முறை நோய்கள் வராமல் தடுக்கலாம். சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்குப் பதிலாக, சாதாரண தண்ணீரைக் குடிக்கவும். இது நம் உடலை சுத்தப்படுத்தி, அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி, நம்மை நீரேற்றமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்கும். நீர் சிகிச்சையானது பிடிவாதமான கொழுப்பை அற்புதமாக கரைப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். கடினமான நீரிழப்பு இருந்தால் உடல் கலோரிகள் எரிக்கப்படுவதில் சிரமம் ஏற்படும். காலையில் தண்ணீர் குடிப்பது நம்மை புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும். இந்த வாட்டர் தெரப்பிக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை.
தொப்பை கொழுப்பு கரைய: மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கும் உணவுகளை உண்ணுங்கள்
பதட்டத்திற்கு மிகவும் பயனுள்ள சில சிகிச்சைகள் நமது சமையலறையிலேயே காணப்படுகின்றன. மன அழுத்தத்தை வெல்ல உதவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களுடன் கூடிய எளிய உணவுகள் பல உள்ளன. உங்கள் மனநிலையை சீராக வைத்திருக்க ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். ஓட்ஸில் செரோடோனின் என்னும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு வேதிப்பொருள் உள்ளதால் அது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இது உங்கள் மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டும்.
மேலும் தேங்காய், பருப்பு வகைகள் போன்றவையும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நம் மனநிலையை நல்ல நிலையில் வைக்கக்கூடியவை. ஆகையால் இவற்றை காலை வேளைகளில் உட்கொள்வது நன்மை தரும். மன அழுத்தம் தொப்பை விழுவதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா மலச்சிக்கலுக்கு குட் பை சொல்லிடலாம்
பெல்லி ஃபேட் குறைய: ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்
ஆரோக்கியமான உணவு ஃபிட்டான மற்றும் தட்டையான தொப்பையை (Belly Fat) பெற மிகவும் முக்கியமானது. அடிக்கடி சாப்பிடுங்கள், ஆனால் அதிக உணவை சாப்பிடுவதை தவிர்த்து அவ்வப்போது சிறிய அளவுகளில் உணவை உட்கொள்ளலாம். இதனால் செரிமான அமைப்பும் சீராக இருக்கும். நீங்கள் உண்ணும் பல்வேறு உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதிக கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை சாப்பிடுவது, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கும். அதிக சர்க்கரையானது கொழுப்பாக சேமிக்கப்பட்டு, வயிற்றின் அளவை அதிகரிக்கச்செய்யும். குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள் திடீர் சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது. மேலும், அவை உங்கள் செரிமானத்தை சீராக்கும். நார்ச்சத்து வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
உடல் எடை குறைய: குறைந்த பட்சம் எட்டு மணி நேரமாவது தூங்குங்கள்
தூக்கமின்மை நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. தூக்கத்திற்கும் இரண்டு ஹார்மோன்களுக்கும் தொடர்பு உள்ளது. கிரெலின் என்பது எப்பொழுது உண்ண வேண்டும் என்று நமக்குத் தெரிவிக்கும் ஹார்மோன் ஆகும், மேலும் நாம் தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, நம் உடல் அதிக கிரெலின் உற்பத்தி செய்கிறது. அதேசமயம், லெப்டின் என்ற ஹார்மோன் தான் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்கிறது. ஒருவருக்கு தூக்கம் இல்லாமல் இருக்கும்போது, அவரது உடலில் லெப்டின் குறைவாக இருக்கும்.
தினமும் எட்டு மணிநேரம் நல்ல தரமான தூக்கம் அனைவருக்கும் தேவை. அது அவசியமில்லை என்று மக்கள் வாதிடலாம், ஆனால் தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, எடை அதிகரிக்கவும் காரணமாகலாம்.
பெல்லி ஃபேட் குறைய: வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்
கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும், தொப்பை கொழுப்பை போக்கவும் உடற்பயிற்சி சிறந்த வழியாகும். இதை தொடர்ந்து செய்வது அனைவருக்கும் அத்தனை எளிதல்ல. ஆனால், இது பழகிவிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கும், தொப்பையை குறைக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் நான்கு நாட்கள் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியில் ஜிம், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆகியவற்றையும் செய்யலாம்.
மேலும் படிக்க | ஆஸ்டியோபீனியா & எலும்புப்புரை நோயை ஓட ஓட விரட்டும் பழக்கங்களும் உணவுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ