சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க இதை விட பெஸ்ட் சாய்ஸ் எதுவுமே இல்ல! ஆயுர்வேத டிப்ஸ்!

Herbs For Kidney Health : சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் பல இருந்தாலும், நாம் சுலபமாக பயன்படுத்தக்கூடியதும், துரிதமாக பலன் தருவதும், எளிதாக கிடைப்பதுமான சிலவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2024, 02:51 PM IST
  • சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள்
  • சுலபமாக பயன்படுத்தக்கூடிய மூலிகை
  • எளிதாக கிடைக்கும் மூலிகைகள்
சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க இதை விட பெஸ்ட் சாய்ஸ் எதுவுமே இல்ல! ஆயுர்வேத டிப்ஸ்! title=

kidney health With Herbs : சிறுநீரக அடைப்பு என்பது சிறுநீரகத்தை விட்டு வெளியேறும் சிறுநீரைத் தடுக்கும் நெஃப்ரான்களில் அடைப்பு ஏற்படும் போது ஏற்படும் ஒரு தீவிரமான பிரச்சனை ஆகும். இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தின் இயக்கத்துக்கு நெஃப்ரான் மிகவும் அவசியமானது. இரத்தத்தை வடிகட்டுவதிலும் சிறுநீரை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் நெஃப்ரான்கள் அடைபட்டால், அது சிறுநீரக பாதிப்பு மற்றும் பிற சிக்கல்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

கிட்னி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறுநீரகத்தை இயல்பாக செயல்பட வைக்கவும், அதன் பராமரிப்புக்கும் நமது உணவு பழக்கவழக்கமும் முக்கியமான காரணமாகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, சிறுநீரகம் முக்கியமானது. சிறுநீரகத்தை பாதுகாக்க தினசரி அடிப்படையில் நமது உணவில் கவனம் செலுத்தினால் போதும்.

நாம் தினசரி பயன்படுத்தும் இந்த பொருட்களும் ஆயுர்வேத மூலிகைகள் தான். மூலிகை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமலேயே நாம் இவற்றை தினசரி பயன்படுத்தி வருகிறோம். 

துளசி

துளசி சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த மூலிகை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. துளசி இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அருந்தலாம் அல்லது நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். துளசியை அப்படியே தண்ணீரில் போட்டு வைத்து வழக்கமான குடிநீரிலும் சேர்த்து அதன் ரசம் இறங்கியதும் பயன்படுத்தலாம்.

இஞ்சி
இஞ்சி சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ள இஞ்சி, பித்தத்தையும் போக்கக்கூடியது. சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு காரணியாக வீக்கம் கருதப்படுகிறது. வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். தினமும் இஞ்சி டீ அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாப்பாக பராமரிக்கலாம்.

மேலும் படிக்க | ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்க

மஞ்சள்
மஞ்சளில் உள்ள வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதை மிகச் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவை மிகவும் சிறந்தது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சிறுநீரக செயல்பாட்டை புதுப்பிக்கவும் மஞ்சளை தினசரி பயன்படுத்த வேண்டும்.

பூண்டு
சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணியாகக் கருதப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பூண்டு உதவும். இதைத் தவிர பூண்டு பல்வேறு நோய்களும் நம்மை அண்டாமல் தடுக்கிறது என்பதால், தினசரி உணவில் பூண்டு சேர்ப்பது ஆரோக்கியத்திற்காஅ சிறந்த தேர்வாகும். இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

கொத்தமல்லி
கொத்தமல்லித்தழை மற்றும் கொத்தமல்லி விதைகள் இரண்டுமே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்ற மூலிகையாகும். உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கொத்தமல்லி உதவுகிறது. இதை சட்னி, ரசம், துவையல், காய்கறிகள் என அனைத்திலும் பயன்படுத்துகிறோம். பச்சையாகவும், சமைத்தும் உண்ணக்கூடிய இந்த மூலிகை, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கோக்ரு
ஆயுர்வேத மூலிகை கோக்ரு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் இரண்டு அம்சங்களான அனபோலிசம் மற்றும் கேடபாலிசம் இரண்டயும் அதிகரிக்க உதவுகிறது. டையூரிடிக் மூலிகையான இது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News