பல ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர், அரசு பொதுப் பள்ளிகளில் யோகா மீது இருக்கும் 28 ஆண்டுகால தடையை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்,
இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கிறதா? அதெப்படி யோகா மீது 28 ஆண்டுகள் தடை தொடர முடியும் என்று திகைப்பாக இருக்கிறதா?
உண்மை தான். இது அமெரிக்காவின் அலபா மாகாணத்தின் தடை. அங்கு அரசு பள்ளிகளில் யோகாவுக்கான தடை 28 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்தத் தடையை நீக்கக் கோரி, ஜெர்மி கிரே (Jeremy Gray) என்ற நாடாளுமன்ற உறுப்பினர், அலபாமா மாநிலத்தில் மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். இப்போதைக்கு, ஜிம் வகுப்புகளின் (gym classes) போது பொதுப் பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
Also Read | IPL 2021: சென்னை அணியின் அபார வெற்றியில் Deepak Chahar பங்கு
தடையை நீக்குவது தொடர்பாக மாநில பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதற்குக் மார்ச் மாதத்தில் அனுமதியும் கிடைத்தது. தற்போது செனட்டில் விவாதம் மற்றும் வாக்களிப்பு நடைபெற வேண்டும்.
பழமைவாதிகள் விதித்த தடை இது என்று ஜெர்மி கிரே (Jeremy Gray) கூறுகிறார். யோகா பயிற்சியை தொடர்ந்து செய்யும் குழந்தைகளை 'வேறு மதத்திற்கு மாற்றப்படலாம்' என்ற சந்தேகத்தில் இந்தத் தடையை நீண்ட காலமாக தொடர்வதாக கூறுகிறார்.
"யோகா என்பது இந்து மதத்தின் முக்கியமான பகுதியாகும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், யோகா பயிற்றுவிப்பாளர்கள் மழலையர் பள்ளி போன்ற வகுப்பறைகளில் யோகாவை கற்றுக் கொடுத்து குழந்தைகளின் மனதை மாற்றலாம்" என்று பழமைவாத அலபாமா ஈகிள் அமைப்பின் இயக்குநர் பெக்கி கெரிட்சன், கருதுகிறார்.
Also Read | தோனி சரியான கேப்டன் இல்லை: கவுதம் கம்பீரின்கருத்துக்கு காரணம் என்ன?
இந்த சிந்தனை தவறானது என்று சொல்லும் ஜெர்மி கிரே (Jeremy Gray) "இந்து மத வாதம் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சம் ஒன்றுதான் இந்த பழமைவாத குழுக்களின் ஒரே கவலை. இதன் அடிப்படையில் அவர்கள் அனைத்தையும் தவறாகவே பார்க்கிறார்கள் என்று கிரே கருதுகிறார்.
தடையை நீக்குவதை எதிர்க்கும் மக்கள் சங்க உறுப்பினர்கள் ஒருபோதும் யோகா பயிற்சி செய்யாதவர்கள் மற்றும் பள்ளியுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்கள் என்று கிரே ஆச்சரியப்படுகிறார்.
"நீங்கள் ஒருபோதும் அனுபவிக்காத ஒன்றைப் பற்றி எப்படி நன்கு அறிந்திருக்க முடியும். இந்த மசோதாவை எதிர்க்காமல் ஆதரவு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
Also Read | ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
இது நாட்டில் இனவெறிக்கு வழிவகுத்த பலகால கருத்துக்களை எதிரொலிப்பதாக மாநிலத்தில் உள்ள இந்து குழுக்கள் கருதுகின்றன.
"இந்த வாதங்கள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்த இந்து-போபியாவின் நினைவூட்டலாகும், இந்துக்கள் உங்கள் மனதை மாற்றி, பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய விசித்திரமான வழிபாட்டு பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற இந்து-ஃபோபியா (Hindu-phobia) இன்னும் நீடிப்பதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது ”என்று வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணியின் (president of the Coalition of Hindus of North America) தலைவர் நிகுஞ்ச் திரிவேதி கருதுகிறார்.
இந்து மதத்தை ஊக்குவிக்கும் யோகாவின் சிந்தனை செயல்முறை எதிர்க்கப்படுகிறது. உண்மையில் அலபாமா மாகாணத்தில் பயிற்சி செய்யப்படும் யோகாவுக்கு இந்து மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
"பெரும்பாலான மக்கள் யோகா செய்ய மாட்டார்கள், அவர்கள் செய்வது ஆசனம் அல்லது பயிற்சிகள். நீங்கள் செய்யும் பயிற்சிகள் செய்வது உங்களை இந்துவாக மாற்றப்போவதில்லை" என்று திரிவேதி கூறுகிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR