West Bengal Assembly elections 2021: மம்தா பானர்ஜி தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் பங்கேற்றார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புருலியாவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்பொழுது மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். பாரிய பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியின் "ஒரு கை பார்க்கலாம்" என்ற கோஷத்தைத் தாக்கி பிரதமர், மம்தா தீதி "கெலா ஹோப்' (khela hobe) என்று கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் பாஜக வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பற்றி பேசி வருகிறது என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) எதுவும் செய்யவில்லை. அவர்களை, இந்த தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என பிரதமர் மோடி கூறினார். பாஜக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ALSO READ | RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி
புருலியா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையின் சிறப்பம்சம்: (PM Narendra Modi Speech)
"இனி ஒரு கை பார்க்கலாம்" என வன்முறை தூண்டும் விதத்தில் தீதி (மம்தா பானர்ஜி) பேசி வருகிறார். ஆனால் நாங்கள் (பாஜக) மாநிலத்தின் வளர்ச்சி, கல்வி, பெண்களின் மேம்பாடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பேசி வருகிறோம்.
காயமடைந்துள்ள மம்தா 'தீதி' விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் கூறினார். (நந்திகிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டி.எம்.சி (TMC) தலைவர் காயமடைந்தார்)
தீதி பட்லா ஹவுஸ் தியாகிகளை அவமதித்தார். எங்களைப் பொறுத்தவரை, தீதியும் இந்தியாவின் மகள். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் -பிரதமர் மோடி
பொது பணத்தை கொள்ளையடிக்கும் மாவோயிஸ்டுகளின் புதிய அமைப்பு டி.எம்.சி உருவாக்கியுள்ளது -பிரதமர் மோடி.
ALSO READ | மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும் டிஎம்சி, பாஜக
டி.எம்.சி 10 ஆண்டுகளாக அராஜக அரசியலில் ஈடுபட்டது. மக்களுக்கு எதிராக தடியடியை பயன்படுத்தியது - பிரதமர் மோடி.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அராஜக ஆட்சி முடிவடையும் - பிரதமர் மோடி.
மக்களுக்கு சேர பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மேற்கு வங்காள தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள் - பிரதமர் மோடி.
நிலக்கரி மற்றும் மணல் மாஃபியாவில் ஈடுபட்ட நபர்களை யார் பாதுகாக்கிறார்கள் என்பது மேற்கு வங்க மாநில மக்களுக்கு நன்றாகத் தெரியும் - பிரதமர்.
மேற்கு வங்கத்தில் பாஜக கட்சிக்கு வாக்களித்தால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ALSO READ | பாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ! மம்தாவுடன் போட்டி
மேற்கு வங்க தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும்:
மேற்கு வங்கத் தேர்தல் எட்டு கட்டங்களாக (elections to be conducted in 8 phases) நடத்தப்படும், முதல் கட்டம் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கும். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை (West Bengal elections Result 2021) மே 2 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR