2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் (10, 12ஆம் வகுப்பு) எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் நிலவிவந்தது. இந்நிலையில், தேர்வுகள் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பானது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.
அதேபோல்இதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு ஓவியம், ராய், குருங், தமாங், ஷெர்பா மற்றும் தாய் தாள்களுடன் தொடங்கி, கணித அடிப்படைத் தாள்களுடன் முடிவடையும்.
அதேபோல், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு தொழில்முனைவோர் தாளில் தொடங்கி உளவியல் தாளுடன் முடிவடைகிறது. தேர்வுகளானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
முன்னதாக, செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் செய்முறைத் தேர்வுகளுக்கு வராதபட்சத்தில், Absent என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர் எதாவது ஒரு காரணத்தால், குறிப்பிட்ட தேர்வன்று வராத சூழலில், Re-scheduled என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. Re-scheduled என்று குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ வாரியம் கூறும் தேதியில் பள்ளிகள் மீண்டும் மறு தேர்வு நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ