உலகின் அதிவேக விரைவு ரயிலுக்கு சொந்தக்கார நாடு! மணிக்கு 603 கி.மீ ஓடும் ஜெட் ரயில்

Fastest Train: உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல.... இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 26, 2023, 06:22 PM IST
  • அதி விரைவு ரயில் எந்த நாட்டில் உள்ளது?
  • உலகின் அதிவேக ரயில் மணிக்கு 605 கிலோமீட்டர் வேகம்
  • சீனாவின் தொழில்நுட்ப புரட்சியில் மற்றுமொரு மைல்கல்
உலகின் அதிவேக விரைவு ரயிலுக்கு சொந்தக்கார நாடு! மணிக்கு 603 கி.மீ ஓடும் ஜெட் ரயில் title=

உலகின் அதிவேக ரயிலை சோதனை அடிப்படையில் சீனா பரிசோதித்து பார்த்திருக்கிறது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கான மோகம் இந்தியாவில் உச்சத்தில் உள்ளது. நம் நாட்டின் நகரங்கள், வந்தே பாரத் ரயில்கள் மூலம் இணைக்கப்படுகின்றன. அதிவேக வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் என்று சொன்னாலும் உண்மைய்ல் அவை அந்த வேகத்தில் ஓடுவதில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு, இந்தியா புல்லட் ரயிலுக்காகக் காத்திருக்கிறது.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். உலகின் மிக நீளமான ரயில் நிலையம் என்ற சாதனையை இந்தியா  (Indian Railways) தொடர்ந்து இரண்டு முறை பெற்றுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் புல்லட் ரயில் எப்போது வரும் என்ற காத்திருப்பு தொடர்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடுத்த 4-5 ஆண்டுகளில் கூடுதலாக, 3,000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது

புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும், இது மும்பை-அகமதாபாத் இடையேயான முழு தூரத்தையும் வெறும் 127 நிமிடங்களில் கடக்கும். ரயிலின் இந்த வேகத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகிவிட்டீர்களா? மணிக்கு 600 கிலோமீட்டர் ஓடும் ரயில் உலகில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல. இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது.

மேலும் படிக்க |  தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

உலகின் அதிவேக ரயில்

உலகின் அதிவேக ரயிலின் வேகம், தண்டவாளத்தில் ஓடும் போது, ​​படத்தை எடுப்பது கூட சிரமமாக உள்ளது. அதன் பெட்டிகளை எண்ணுவது கூட கடினம். உலகில் புல்லட் ரயில்களின் சராசரி வேகம் சுமார் 300 ஆக இருக்கும் நிலையில், இந்த புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 603 கி.மீ. சீனாவில் ஓடும் உலகின் அதிவேக புல்லட் ரயிலின் பெயர் மாக்லேவ்.
 
சிறப்புவாய்ந்த புல்லட் ரயில்  

இந்த ரயிலின் சாதாரண வேகம் மணிக்கு 300 கி.மீ., அதிகபட்ச வேகம் மணிக்கு 603 கி.மீ. Maglev இன் தொழில்நுட்பம் முதலில் ஜெர்மனியில் இருந்து கிடைத்தபோது, அதை சீனா ஏற்றுக் கொண்டது. சீன ரயில் தயாரிப்பு நிறுவனமான சிஆர்ஆர்சி நிறுவனம் இந்த புல்லட் ரயிலின் அதிவேகத்தை வெற்றிகரமாக சோதித்தது.

சீனாவின் புதிய Maglevக்கு முன், உலகின் அதிவேக ரயில் என்ற பட்டத்தை பிரான்சின் Euroduplex TGV பெற்றுள்ளது. இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 574.8 கிலோமீட்டர் ஆகும்.

ரயிலின் அதிக வேகத்தின் பின்னால் உள்ள ரகசியம்
மக்லேவ் ரயிலின் தொழில்நுட்பம் மற்ற புல்லட் ரயில்களில் இருந்து வேறுபட்டது. இந்த ரயில் மேக்னடிக் லெவிடேஷன் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே ஒருவித வலுவான காந்த விசை உள்ளது, இது வேகத்தை பெற உதவுகிறது.

மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு இந்திய ரயில்வே புரிந்துள்ள சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News