Profitable Business Ideas In India: இந்தியாவின் பொருளாதாரம் அவ்வப்போது எதிர்பாராத வகையில் பெரிய திருப்புமுனையை சந்திக்கும். சந்தையில் ட்ரெண்டில் இருக்கும் தொழில்கள் நிறைய இருந்தாலும், கடந்த ஆண்டின் ஆய்வின் படி, சில தொழில்கள் மட்டுமே அதிகம் வருவாய் தரக்கூடியவையவையாக இருக்கின்றன. அவை என்னென்ன தொழில்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
க்ளவுட் கிச்சன்:
எப்போதும் சறுக்கி விடாத தொழில்களுள் ஒன்று, உணவு சம்பந்தப்பட்ட தொழில் ஆகும். சமீப சில ஆண்டுகளாக ட்ரெண்டில் உள்ள சுய தொழில், க்ளவுட் கிச்சன் ஆகும். நகர வாழ்க்கையில் எதற்கும் டைம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் பெரிதும் பிரபலமாக இருக்கும் தொழில் இது. பலர், வீட்டில் இருந்து உணவு கொண்டு போகவில்லை என்றால், ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்வதுண்டு. ஆன்லைன் தளங்கள் மட்டுமன்றி, சில ஆண்டுகளாக ஆன்லைன் ஹோட்டல்களின் வருகையும் பெருகி விட்டன. க்ளவுட் கிச்சனை, ஆன்லைன் ஹோட்டல் என்றும் சொல்லலாம். மும்பை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த தொழில் மிகவும் லாபகரமாக உள்ளதாக இங்கு தொழில் நடத்துபவர்கள் கூறுகின்றனர். சிறிய அளவு முதலீட்டை வைத்தே இந்த தொழிலை பெரிதாக வளர்க்க முடியும்.
திருமண ஏற்பாட்டாளர்கள்:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை event organizers என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். குறிப்பாக, திருமணங்களை நடத்தி வைப்பவர்களுக்கு எப்போதும் மார்கெட் இருந்து கொண்டே இருக்கும், இந்தியா, ஆடம்பர திருமண விழாக்களுக்கு பெயர் போனவை. இதை நடத்தி வைக்கும் ஏற்பாட்டாளர்கள் கேட்டரிங்கிள் இருந்து தாம்பூல பை கொடுப்பவர் வரை அனைவரையும் பார்த்துக்கொள்வர். இதுவும், பல லட்சம் வருமான உள்ள தொழில் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதள வடிவமைப்பாளர்கள்:
கொரோனா அலையினால் இணையதளம் பெரிதாக வளர்ந்து விட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அனைத்திற்கும் இப்போது ஆன்லைனில் தளங்கள் வந்துவிட்டன. பல நிறுவனங்கள் தற்போது பலரை கவரும் வகையிலான இணையதளங்களை வைத்து கொள்கின்றன. இதை வடிவமைப்பவர்களுக்கும் பல லட்சத்தை கொட்டிகொடுக்கின்றன. இந்தியாவில் அதிகம் வருவாய் தரும் தொழில்களுள் இதுவும் ஒன்றாகும்.
இயற்கை விவசாயம்:
கொரோனா பேரிடர் யாருக்கு எதை கற்றுக்கொடுத்ததோ இல்லையோ, நன்றாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கற்றுக்கொடுத்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பெரிதான புரிதல் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி ஆரோக்கியமான உணவு பொருட்களையே தங்களது உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். விவசாயம் இந்தியாவிற்கு அதிகம் வருவாய் ஈட்டித்தரும் தொழில்களுள் ஒன்றாகும். ஆதாலா, ஆர்கானிக் ஃபார்மிங் தொழிலும் நிச்சயமாக பல லட்சம் வருவாய் ஈட்ட கைக்கொடுக்கும்.
ஆன்லைன் பயிற்சி மையம்:
வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பவர்கள், படித்து விட்டு வேலை தேடுபவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள் என அனைவருமே ஆன்லைனில் தகுந்த சான்றிதழ் இருந்தால் பிறருக்கு வகுப்பு எடுக்கலாம். தங்களின் அறிவை மேம்படுத்தவும், பிறரின் அறிவை மேம்படுத்தவும் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம், தங்களுக்கு தெரிந்த திறமைகளை, பாடங்களை பிறருக்கு சொல்லிகொடுத்தல் போதுமானது. இதற்காக பல அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் அவர்களுக்கான ஆடியன்ஸை தேர்வு செய்து இந்த சிறு தொழிலை ஆரம்பிக்கலாம். தனியாக ஆரம்பிக்க எண்ணினால், சரியாக அதற்கான இணையதளத்தையும் தொடங்கலாம். இதற்கு, ரூ.25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை முதலீடு தேவைப்படலாம்.
மேலும் படிக்க | வீட்டிலேயே இருந்து ‘இந்த’ சுய தொழில்களை செய்யலாம்! அதிக வருமானம் தரும் ஐடியாக்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ