Home loan அடைந்து விட்டதா? இந்த முக்கிய வேலையை செய்ய மறக்காதீர்கள்!!

சில நேரங்களில், முழு தவணையும் செலுத்திய பிறகும், நீங்கள் நிலுவைத் தொகையைப் பெறலாம். இதைத் தவிர்க்க, NOC சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 01:14 PM IST
  • வங்கிக் கடனை முழுவதுமாக செலுத்திய பிறகு, வீட்டுக் கடனுக்கான NOC பெறுவது மிகவும் அவசையமாகும்.
  • NOC எடுத்த பின்னரே நீங்கள் வாங்கிய கடம் முழுமையாக பூர்த்தியாகிறது.
  • வழக்கமாக NOC, registered post மூலம், வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.
Home loan அடைந்து விட்டதா? இந்த முக்கிய வேலையை செய்ய மறக்காதீர்கள்!! title=

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிலிருந்து வாங்கிய வீட்டுக் கடனை (Home Loan) அடைப்பது என்பது பெரும் நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். ஆனால் அந்த சந்தர்பத்தில் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயமும் உள்ளது. வீட்டுக் கடனுக்கான No Objection Certificate அதாவது NOC பெறுவதுதான் அது. இதை லேசாக எடுத்துக்கொண்டு புறக்கணித்து விடாதீர்கள். மிகவும் சாதாரண விஷயமாகக் கருதப்படும் இந்த சான்றிதழ், எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். NOC பெறுவது பல வழிகளில் மிகவும் முக்கியமானது. இதன் பல நன்மைகள் உள்ளன.

ALSO READ: SBI வாடிக்கையாளரா நீங்கள்?... இனி Login செய்யாமலே இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்...

வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பெற்ற வீட்டுக் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு, No Objection Certificate பெறுவதற்கு பொருள், இனி நீங்கள் உங்களது வீட்டுக் கடன் தொடர்பான எந்த தொகையையும் செலுத்த வெண்டிய அவசியம் இல்லை என்பதாகும். NOC எடுத்த பிறகு, வீடு முற்றிலும் உங்களுடையதாகி விடும். சொத்து மீது வங்கிக்கு எந்த உரிமையும் இருக்காது.

சில நேரங்களில், முழு தவணையும் செலுத்திய பிறகும், நீங்கள் நிலுவைத் தொகையைப் பெறலாம். இதைத் தவிர்க்க, NOC சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும். இது வங்கி அல்லது NBFC மற்றும் உங்களுக்கிடையேயான ஒரு சட்ட ஆவணமாகும். உங்களிடையே இனி எந்த தொகை நிலுவையும் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதனால் தான் இதை No Due Certificate என்றும் கூறுகிறார்கள்.

NOC எடுத்த பின்னரே நீங்கள் வாங்கிய கடம் முழுமையாக பூர்த்தியாகிறது. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் NOC பெறவில்லை என்றால், முந்தைய கடன் முழுமையாக முடிந்ததாகக் கருதப்படாது. இதனால் உங்கள் Credit Score-ரும் பாதிக்கப்படும். இதனால், எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படலாம்.

வழக்கமாக NOC, registered post மூலம், வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. எனவே வங்கியில் நீங்கள் கொடுத்துள்ள உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் சொத்தை காப்பீடு செய்திருந்தால், எந்தவித தொகையும் கடன் வழங்குபவருக்குத்தான் வழங்கப்படும். ஆனால் நீங்கள் NOC எடுத்திருந்தால், இந்த தொகை உங்களுக்கு நேரடியாக வழங்கப்படும். எனவே நீங்கள் கடனை முழுமையாக செலுத்திய பிறகு, கண்டிப்பாக NOC பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

ALSO READ: ஒரு நாளைக்கு 30 ரூபாய் சேமித்து கோடீஸ்வரராகும் Formula இதுதான்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News