மனம் இருந்தால் மார்க்கமுண்டு என அசத்தும் கேரளாவை சேர்ந்த பிரபல ரிசார்ட்..!!!

உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 03:38 PM IST
  • சுற்றுலா தலங்களில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை சார்ந்துள்ள பல சிறிய துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
  • தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முத்துப் புள்ளி மீன் மிக பிரபலமான உணவாகும்
மனம் இருந்தால் மார்க்கமுண்டு என அசத்தும் கேரளாவை சேர்ந்த பிரபல ரிசார்ட்..!!! title=

கோவிட்-19 பரவல் காரணமாக, வேறுபாடு ஏதும் இல்லாமல், அனைத்து நாடுகளும் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலா துறை.

உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களில் உள்ள ஹோட்டல்கள், மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை சார்ந்துள்ள பல சிறிய துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. அதனை நிரூபித்துள்ளது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட். 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அவேதா ரிசார்ட். வெளிநாட்டை சேர்ந்த சுற்றூலா பயணிகளால், ஆண்டு முழுவதும் ரிசார்ட் நிரப்பி வழியும். ஆனால் கொரோனா காரணமாக வணிகம் ஏதும் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது அதன் நிர்வாகம், அதன் நீச்சல் குளத்தை மீண்வளர்க்கும் குளமாக மாற்றி, அதனை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | ₹5,999 விலையில் Gionee Max அசத்தல் Smartphone.. விபரம் உள்ளே..!!

இந்த குளத்தில் முத்துப்புள்ளி மீன் என்னும் மீன் வகையை வளர்த்து வருகிறது. இந்த வகை, தென்னிந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலமான உணவாகும், 

நவம்பர் மாதத்தில் வளர்ச்சி அடைந்த மீன்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரிசார்ட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டலாம் என்பதால், கொரோனா நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும், தொடர இவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

அப்போது இந்த மீன்களை நீச்சல் குளத்தில் வளர்க்க முடியாது என்பதால், அதற்கான வேறொரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மீன் வளர்ப்பு பணி தொடரும் என ரிசார்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | உலகின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!
 

Trending News