முன்பெல்லாம், வங்கியில் இருந்து பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதிருந்தது. அதன்பின், ஏடிஎம் இயந்திரம் வந்து அந்த கொடுமையை நீக்கி, சில நிமிடங்களில் நமது பணத்தை கைகளில் சேர்க்க உதவியது.
ஏடிஎம் இயந்திரத்தின் முன் கூடிய கூட்டத்தை அடுத்து, UPI வசதி நமது மொபைலுக்கு வந்து, பண பரிவர்த்தனையை எளிதாகியுள்ளது. அதேபோன்று, தற்போது, தங்கத்தை எடுக்கவும் புது ஏடிஎம் இயந்திரம் வந்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?, ஆம், அதுவும் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோல்டுசிக்ஷா என்ற நிறுவனம் முதல் தங்கத்திற்கான ஏடிஎம் இயந்திரத்தை ஹைதராபாத்தில் அமைத்துள்ளது. தங்கத்தை வாங்குவதிலும், விற்பதிலும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம், கோல்டுசிக்ஷா. இனிமேல் தங்கம் வாங்க நினைப்பவர்கள், தங்கத்திற்கான ஏடிஎம் வந்தால் போதும், நகைக்கடைகளுக்கு செல்ல வேண்டாம்.
Hyderabad | Real-time gold ATM, which dispenses gold coins, installed in the city
It's a venture by (company) Goldsikka where customers can buy gold from an ATM machine. 24-carat gold coins between 0.5-100 gms are dispensed through the machine: Pratap, Vice-President, Goldsikka pic.twitter.com/ny1oYchCfh
— ANI (@ANI) December 5, 2022
மேலும் படிக்க | பேடிஎம் Wallet-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புவது எப்படி?
தங்கத்திற்கான ஏடிஎம் பயன்பாட்டிற்கு எளிமையானது, 24 மணி நேரமும் கிடைக்கும் தன்மை மற்றும் அனைத்து விலை வரம்பிற்குள் தங்கத்தை வாங்கும் வாய்ப்பு உள்ளிட்ட பல நன்மைகள் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. பண பரிவர்த்தனைகளை முடிக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தங்கத்திற்கான ஏடிஎம்மின் மென்பொருளை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓபன் கியூப் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஹைதராபாத், பேகம்பேட்டில் உள்ள கோல்ட்சிக்ஷா நிறுவன தலைமையகத்தில், முதல் தங்கத்திற்கான ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது.
தங்கம் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவது சவாலானது என்று கோல்ட்சிக்ஷா கூறினார். தங்கத்தை மிகவும் மலிவு விலையிலும், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதே அதன் குறிக்கோள் என்றும் அந்த நிறுவனம் கூறியது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மட்டுமின்றி, அந்த நிறுவனம் தங்கம் வாங்க பயன்படுத்தப்படும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
தங்கத்திற்கான ஏடிஎம் மற்ற ஏடிஎம்களைப் போலவே செயல்படுகிறது. தங்கத்தை வாங்குவதற்கு இருக்கும் ஆப்ஷன்களை தேர்வு செய்த பிறகு, ஒருவர் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டும். நீங்கள் நிர்ணயிக்கும் தொகைக்கு தகுந்த அளவிற்கு தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஏடிஎம்மில் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கம் பெறலாம். 0.5 கிராமுக்குக் குறைவான அல்லது 100 கிராமுக்கு மேல் தங்கம் வாங்க முடியாது. தினந்தோறும் தங்கத்தின் சந்தை விலை அப்டேட் செய்யப்படும். இந்த ஏடிஎம் மூலம் விநியோகிக்கப்படும் அனைத்தும், 24 காரட் தங்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா, அப்போ உடனே இத படிங்க
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ