EPF Withdrawal Rules: PF என்னும் வைப்பு நிதி என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான அரசின் சேமிப்புத் திட்டம். இந்தியாவில் பணியில் உள்ள அனைவர்களுக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) இயக்கப்படும் PF கணக்குகள் இருக்கும். இந்தக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது. மேலும், அதற்கு இணையாண தொகையை முதலாளி அல்லது நிறுவனம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறது.
இபிஎஃப் கணக்கில் (EPF Account) பணத்தை நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெறும்போது வட்டியுடன் ஒரு பெரிய தொகை திரும்பக் கிடைக்கிறது. பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டியும் அளிக்கின்றது.
பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை (EPF Amount) பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம். PF கணக்கில் இருந்துபணத்தை எடுப்பதற்கு, EPFO பல எளிதான ஆன்லைன் வசதிகளை வழங்கியுள்ளது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து வீட்டில் இருந்த படியே க்ளைம் செய்யலாம். க்ளைம் செய்த 7-10 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து விடும். ஆனால் க்ளைம் செய்யும் போது பயனாளிகள் செய்யும் சில பொதுவான தவறுகள் காரணமாக PF க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
PF கிளைம் நிராகரிக்கப்படுவதன் காரணம்
பிஎஃப் பணத்தை எடுக்க, EPFO விதிகளைப் பின்பற்றுவது அவசியம். இந்த விதிகளில் ஏதேனும் பின்பற்றப்படாவிட்டால் அல்லது ஏதேனும் தவறான தகவல் வழங்கப்பட்டால், உங்கள் கிளைம் நிராகரிக்கப்படலாம். க்ளெய்ம் நிராகரிப்புக்கு வழிவகுக்கும் சில தவறுகள் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
1. KYC பூர்த்தி செய்யப்படாத நிலை
உங்கள் PF கணக்கின் KYC பூர்த்தி செய்யப்படாவிட்டால், உங்கள் க்ளைய்ம் நிராகரிக்கப்படலாம். EPFO விதிகளின்படி, வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். EPFO உறுப்பினர் இ-சேவா போர்ட்டலுக்குச் சென்று இந்த தகவல்களை புதுப்பிக்கலாம்.
2. பிறந்த தேதி தவறாக பதிவாகியிருக்கும் நிலை
உங்கள் PF கணக்கில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியும், உங்கள் முதலாளியின் (நிறுவனத்தின்) பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியும் வித்தியாசமாக இருந்தால், உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம். இந்த தவறை சரிசெய்ய, உங்கள் ஆவணங்களை EPFO போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
3. வங்கி விவரங்கள் தவறாக இருத்தல்
க்ளைம் செய்யும் போது நீங்கள் தவறான வங்கிக் கணக்கு எண் அல்லது IFSC குறியீட்டை உள்ளிட்டிருந்தால், உங்கள் பணம் கணக்கிற்கு வராமல் போகும் அல்லது உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும். எனவே, க்ளைம் செய்வதற்கு முன், உங்கள் வங்கி விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
4. ஆவணம் தெளிவாக இல்லாத நிலை
உங்கள் கிளைம் விண்ணப்பத்துடன், வங்கி பாஸ்புக் அல்லது காசோலையின் நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த நகல் தெளிவாகவோ அல்லது சரியாகவோ இல்லாவிட்டால், உங்கள் கிளைமை EPFO நிராகரிக்கலாம். எனவே, ஆவணங்கள் தெளிவான வடிவத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
5. விதிகளைப் பின்பற்றாத நிலை
EPFO விதித்துள்ள சில நிபந்தனைகளின் கீழ் PF பணத்தை திரும்பப் பெறலாம். எந்தவொரு தேவையும் இல்லாமல் அல்லது விதிகளைப் பின்பற்றாமல் நீங்கள் கிளைம் செய்திருந்தால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
கிளைம் நிராகரிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டியவை
1. KYC தகவல்களை புதுப்பித்து, அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
2. பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை முதலாளியின் பதிவுகளுடன் பொருத்தி பார்து சரியாக உள்ளதா என உறுதிபடுத்திக் கொள்ளவும்.
3. கிளைம் படிவத்தை நிரப்புவதற்கு முன் வங்கி விவரங்களை மீண்டும் சரிபார்க்கவும்.
4. கிளைம் விண்ணப்பத்துடன், தெளிவான மற்றும் சரியான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை சரிபார்ப்பதன் மூலம், உங்கள் கிளைம் எளிதில் நிறைவேற்றப்படும். நீங்கள் எந்த விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.
மேலும் படிக்க | EPFO RULE: ஓய்வூதிய பலன் பாதிக்காமல்... PF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ