புதுடெல்லி: வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை, உருளை ஒன்றுக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
#WATCH | "...The prices of the LPG gas cylinders for domestic use have been brought down by Rs 200 per cylinder, for each and every user. At the same time, 75 lakhs new gas connections will be given under the 'Pradhan Mantri Ujjwala Yojana'...'Pradhan Mantri Ujjwala Yojana'… pic.twitter.com/2dJoUQv86c
— ANI (@ANI) August 29, 2023
'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' பயனாளிகள் ஏற்கனவே ரூ.200 மானியம் பெறுகின்றனர்.தற்போது விலை குறைவினால் அவர்களும் பயனடைவார்கள். விலை, அதாவது 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கு 400 ரூபாய் வீதம் குறைக்கப்படும்...'' என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், "வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சிலிண்டருக்கு ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். இந்த விலைக் குறைப்பு, ஓணம் மற்றும் ரக்ஷாபந்தனை முன்னிட்டு, குடும்பத் தலைவிகளுக்குபிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!
சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளை பூர்த்தியானதால் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் விலை குறைவு என்பது, அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத்தேர்தலுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், மக்களுக்கு நிம்மதி தான்.
2016 ஆன் ஆண்டு தொடங்கப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் (பிபிஎல்) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் ஏப்ரல் 2018 ஆண்டில் மேலும் ஏழு பிரிவுகளை (SC/ST, PMAY, AAY, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலைத் தோட்டம், காடு மற்றும் தீவு பகுதியில் வசிப்பவர்கள்) சேர்ந்த பெண் பயனாளிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.
மேலும், இந்த திட்டதில் எட்டு கோடி எல்பிஜி இணைப்புகளுக்கு என இலக்கு அதிகரிக்கப்பட்டது. இந்த இலக்கு ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஏழு மாதங்கள் முன்னதாகவே இலக்கை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள் உள்ளனர்.
மேலும் படிக்க: LPG Gas Price: மகிழ்ச்சி! சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறையலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ