இந்த தீபாவளி பண்டிகைக்கு பெர்சனல் லோன் வழங்கும் வங்கிகள்!

யெஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகளும் சில நிதி நிறுவனங்களும் பண்டிகை கால தனிநபர் கடன்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 07:23 AM IST
  • தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.
  • பல நிறுவனங்கள் ஆபர்களை அள்ளி வழங்கி உள்ளன.
  • வங்கிகள் பர்சனல் லோன்களை வழங்கி வருகிறது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு பெர்சனல் லோன் வழங்கும் வங்கிகள்! title=

தீபாவளி பண்டிகை என்றால் பலரது பர்ஸ்களும் பஞ்சர் ஆகிவிடும், அந்த ஒருநாள் சந்தோஷத்திற்காக நமது சேமிப்புகள் சரசரவென சரிந்துவிடும்.  இந்த பண்டிகை முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, இந்த பாண்டிகை காலங்களில் மக்கள் புதிய ஆடைகள், கேஜெட்டுகள், வீடு தொடர்பான பொருட்கள், வாகனங்கள் போன்ற புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.  இந்த சமயத்தில் மக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் தவணை முறையில் பல கடன்களை வழங்குகின்றன.  மேலும் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் தனிப்பட்ட கடன்கள், மற்றும் வாகனக் கடன்கள் போன்றவற்றிற்கு பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகள் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.  இந்த தீபாவளி பண்டிகையின்போது எந்தெந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தனிபர் கடன் சலுகைகளை வழங்குகிறது என்று இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

யெஸ் வங்கி : 

யெஸ் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை வழங்குகிறது, இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலும் கால அவகாசம் வழங்குகிறது.  இதுகுறித்து யெஸ் வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கூறியதாவது, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 10.99%-ல் தொடங்குகின்றன, இந்தக் கடன்களைப் பெறுவதற்கு எந்த சாட்சியங்களும் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.  யெஸ் வங்கியின்  இணையதளம் மூலம் ஆன்லைனில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பஜாஜ் ஃபின்சர்வ் : 

பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 லட்சம் வரை தனிநபரை கடனையும், அதிகபட்சமாக 60 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தையும் வழங்குகிறது.  பஜாஜ் ஃபின்சர்வ் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் 3 வகையான தனிநபர் கடன்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது, அதாவது ஃப்ளெக்ஸி கால கடன்கள், ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன்கள் மற்றும் கால கடன்கள் ஆகியன.  பஜாஜ் ஃபின்சர்வில் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11%-ல் தொடங்குகின்றன. 

ஹெச்டிஎஃப்சி வங்கி : 

ஹெச்டிஎஃப்சி வங்கி ஆண்டுக்கு 10.75% வட்டியுடன் ரூ.40 லட்சம் வரையிலான தனிநபர் கடனை வழங்குகிறது, இந்த கடன்களை திருப்பிச் செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
IndusInd வங்கி: 

IndusInd வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை வழங்குகிறது, வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11.00%-லிருந்து தொடங்குகிறது மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 60 மாதங்கள் வரை வழங்கப்டுகிறது.  இங்கு கடன்களை பெற்றுக்கொள்ள ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

டாடா கேபிடல் : 

டாடா கேபிடல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 லட்சம் வரை தனிநபர் கடனை வழங்குகிறது, கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 72 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது.  இதில் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 11.25%-ல் தொடங்குகின்றன.  மேலும் டாடா கேபிடல் 100% காகிதமில்லாத கடன்களையும் வழங்குகிறது, இதன் இணையதள பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 

கோடக் மஹிந்திரா வங்கி : 

கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது, இதன் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் 10.50%-லிருந்து தொடங்குகின்றன மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது. 

ஆதித்யா பிர்லா கேபிடல் : 

ஆதித்ய பிர்லா கேபிடல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 லட்சம் வரை தனிநபர் கடனை வழங்குகிறது, கடனை  திருப்பிச் செலுத்தும் காலம் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் 11.00%-ல் தொடங்குகிறது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய சில வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News