Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள்

Budget 2024: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அலுவலக பணிகளில் உள்ள சம்பள வர்க்கத்தினர் வரிச்சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போதும் போல், இந்த முறையும் அனைவருக்கும் வரி தள்ளுபடி (Income Tax Benefits) கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 6, 2024, 09:31 AM IST
  • பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் என்ன?
  • 80D விலக்கு வரம்பு.
  • TDS செயலாக்கத்தை எளிதாக்க வேண்டும்.
Budget 2024: வரிசெலுத்துவோருக்கு நல்ல செய்தி.... காத்திருக்கும் வரிச் சலுகைகள், விலக்குகள் title=

Budget 2024: நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த பட்ஜெட்டின் மீதும் அனைவரது எதிர்பார்ப்புகளும் உள்ளன. இருப்பினும், இந்த முறை நிதியமைச்சர் 2024-25 இடைக்கால பட்ஜெட்டை (Interim Budget) தாக்கல் செய்வார். இன்னும் சில மாதங்களில் நாட்டில் பொதுத்தேர்தகள் நடக்கவுள்ளதால், பெரிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு சற்று குறைவு. எனினும் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதற்கிடையில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அலுவலக பணிகளில் உள்ள சம்பள வர்க்கத்தினர் வரிச்சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போதும் போல், இந்த முறையும் அனைவருக்கும் வரி தள்ளுபடி (Income Tax Benefits) கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations):

இந்த முறை பட்ஜெட்டில் பொது மக்களின் வரி தொடர்பான எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பற்றி இங்கே காணலாம். 

80D விலக்கு வரம்பு (80D Deduction Limit)

இந்த முறை பட்ஜெட்டில் (Union Budget 2024) அரசாங்கம் 80D வரம்பை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். பிரிவு 80D இன் கீழ் காப்பீட்டு பிரீமியத்தின் அளவு அதிகரிக்கப்படலாம். அரசாங்கம் அதன் வரம்பை ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்த வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) இந்த வரம்பு ரூ.50,000 முதல் ரூ.75,000 ஆக அதிகரிக்கலாம்.

இது தவிர, புதிய வரி விதிப்பின் (New Tax Regime) பிரிவு 80D இன் பலன்களை அதிகரிப்பதன் மூலம், சுகாதார சேவைத் துறையின் அணுகலுக்கு அரசாங்கம் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க | Insurance: 1 ரூபாய் செலவில்லாம கிடைக்கும் காப்பீடு! LPGக்கு ரூ 50 லட்சம் இன்சூரன்ஸ்

10 ஆண்டுகளுக்கு முன்பு 80C வரம்பு உயர்த்தப்பட்டது

கடந்த 2014-ம் ஆண்டு 80சி (80C) பிரிவின் வரம்பை அரசாங்கம் (Central Governmemt) உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14 நிதியாண்டு வரை இந்தப் பிரிவின் கீழ் வரம்பு ரூ.1 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2014 பட்ஜெட்டில் இது ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த பிரிவின் வரம்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், வரி செலுத்துவோர் (Taxpayers) மற்றும் ஊழியர்கள் (Employees) ஒவ்வொரு ஆண்டும் இந்த வரம்பை அரசாங்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

TDS செயலாக்கத்தை எளிதாக்க வேண்டும்

தற்போது, ​​₹50 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினால் 1% டிடிஎஸ் (TDS) கழிக்கப்படுகிறது. குடியுரிமை பெற்ற, நாட்டில் வசிக்கு மக்கள் சொத்துகளை விற்கும் போது இது ஒரு நேரடியான செயல்முறையாக உள்ளது. அதே நேரத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) சொத்து விற்கும்து போது இது மிகவும் கடினமாக உள்ளது.

மூலதன ஆதாய வரியை எளிதாக்க வேண்டும் (Capital Gains Taxation)

இது தவிர, இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) தொடர்பாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வரி விகிதத்தில் இருந்து குடியுரிமை நிலை மற்றும் வைத்திருக்கும் காலம் வரை இதில் பல சிக்கல்கள் உள்ளன.

நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்கலாம் (Increase in Standard Deduction Limit)

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ​​அரசாங்கம் நிலையான விலக்கு (Standard Deduction) வரம்பை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலையான விலக்கு ரூ.50,000 ஆக உள்ளது. இதை 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என கே.பி.எம்.ஜி. (KPMG) கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் வருகிறது டிஏ ஹைக் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News