Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது. இதன் காரணமாக இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.
Union Budget 2024: எதிர்பார்ப்பின் உச்சத்தில் பல துறைகள்
இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என அனைத்து துறைகளும் காத்திருக்கின்றன. பட்ஜெட்டுக்கு முன்னர் நடந்த பல கட்ட கூட்டங்களில் அனைத்து முக்கிய துறைகளின் பிரதிநிதிகளும் தங்களது கோரிக்கைகளை நிதி அமைச்சர் (Finance Minister) மற்றும் அவரது குழுவிடம் அளித்துள்ளனர். பட்ஜெட்டுக்கான இறுதி வரைவை தயார் செய்யும் முன் நிதி அமைச்சர் இந்த கோரிக்கைகளையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விவசாயத்துறை:
இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டின் முதுக்கெலும்பாக விவசாயமும் விவசாயிகளும் உள்ளனர். இந்த நிலையில் இந்த துறை மீது அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கு சிறப்பு கவனமும் அளிக்கப்படுகின்றது. அந்த வகையில், இந்த பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கான பல வித அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விவாயத்துறையில் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
விவசாயத் துறையின் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:
- பிஎம் கிசான் தவணையை அதிகரிக்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
- விவசாயத்துறை பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு நேரடி பலன் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் மூலம் நேரடி மானியங்களையும் நிதி அமைச்சரிடம் கோரியுள்ளனர்.
- விவசாயத் துறையில் ஆராய்ச்சிக்கான கூடுதல் நிதியையும் அவர்கள் கோரினர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi)
விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தில் கிடைக்கும் ஆண்டு பலன்களை நிதியமைச்சர் உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக மணிகண்ட்ரோல் அறிக்கை தெரிவிக்கின்றது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் PM-KISAN மொத்த தவணை ஆண்டுக்கு தற்போது இருக்கும் ரூ.6,000 -இலிருந்து ரூ.12,000 ஆக இரட்டிப்பாக்கப்படக்கூடும் என்று அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி 17வது தவணைத் தொகையாக 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார்.
PM-KISAN: இந்த திட்டம் எப்போது அறிமுகம் ஆனது?
- பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம், 2019 இல் பிரதமர் நரேந்திர மோடியால் விவசாயிகளின் நலத்திட்டமாக தொடங்கப்பட்டது.
- இது நாடு முழுவதும், விவசாய நிலத்துடன் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் சில விலக்குகளும் உள்ளன.
- இந்த இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 விவசயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றது.
- ரூ.2000 வீதம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளாக இது அளிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | அதிக வட்டி விகிதத்தை வழங்கும் பாங்க் ஆஃப் பரோடாவின் டெபாசிட் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ