பட்ஜெட் 2024: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் பல முக்கிய பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தனது முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு பெரிய பரிசை வழங்கிய அவர், இப்போது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு என்ன செய்யவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அடுத்ததாக எழுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்பொது வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜூன் 24 மற்றும் ஜூலை 3 க்கு இடையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெறும் என்று தெரிகிறது. அப்போது, மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அதிகார வட்டாரங்களில் இருந்து கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம். 18வது மக்களவைக்கு நாடாளுமன்றத்தில், மக்களவை சபாநாயகர் ஜூன் 26ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கு அடுத்த நாள், ஜூன் 27ம் தேதி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்றும் தெரிகிறது.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கியவர்களின் கடன் சுமையை குறைக்க சுலபமான வழிகள்! டோண்ட் மிஸ்!
ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாக, மோதி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இடைக்கால பட்ஜெட் ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், தொடர்ந்து 6 பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறியடிப்பார்.
நிதியமைச்சர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்
மக்களவைத் தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அன்றைய நிதியமைச்சரே, தேர்தலுக்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக தொடர்கிறார். தேர்தலுக்கு பிறகு பாஜக தனது தனிப் பெரும்பான்மையை இழந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணி கட்சியின் விருப்பங்களையும் கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் தற்போது உருவாகிவிட்டது.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் தொடர்வதையும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்ய வேண்டிய நேரத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிதிக் கோரிக்கைகளையும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலத் திட்டங்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது முதல் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வரை பல விஷயங்கள் தற்போதைய அரசின் முன் இருக்கும் சவால்கள் என்று சொல்லலாம். அதேநேரத்தில், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கத்தில் கொள்கைகளைத் தொடர கணிசமான வாய்ப்புகளும் உள்ளன.
இடைக்கால பட்ஜெட்
அனைவரையும் உள்ளடக்கிய அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்துடன் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த இடைக்கால பட்ஜெட்டில் கடன்கள் தவிர மொத்த வருவாய் மற்றும் மொத்த செலவினத்தொகை முறையே 30.80 லட்சம் கோடி மற்றும் 47.67 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது பேசிய மத்திய நிதியமைச்சர், தேர்தல் ஆண்டு என்பதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் (Lok Sabha Election) பிறகு, மக்களின் முழு ஆதரவுடன் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த நம்பிக்கைப் பொய்த்துப்போன நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ