புது டெல்லி: 2021ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்ய உள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் அனைத்துத் துறைகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றைச் சரிசெய்யும் அளவுக்கு இந்த பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிமாண்ட்-சப்ளை பிரச்சனைகளுக்கு தீர்வு
கடந்த ஆண்டு தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு ஆளான பிறகு, இப்போது நிலைமை சற்று சீராகி, வேகத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு துறை சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
ALSO READ | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 அன்று தொடக்கம்.. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்
இந்த யோசனை எங்கிருந்து வந்தது
கடந்த ஆண்டு 'ஆத்மனிர்பர் பாரத்' தொகுப்பின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணம்
"வரி விலக்கு விரிவாக்கம் இந்த துறைக்கு நிவாரணம் அளிக்கும். நிலைமை சீராகும்போது குடியிருப்பு பிரிவுகளுக்கான தேவை அதிகரிக்கும். அப்போது விற்கப்படாமல் இருக்கும் வீடுகளும் விற்கப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த வரிச் சலுகையால் யாரெல்லாம் பயனடைவார்கள்
"வீட்டு சொத்து வருமானத்தின் வரிவிதிப்பு தொடர்பான விதிகள், இரண்டு வருடங்களுக்கும் மேலாக குடியிருப்பு அலகுகளை உருவாக்குபவர்களால் வர்த்தகத்தில் கையிருப்பில் வைக்கப்படாத விற்கப்படாத அலகுகளுக்கு வரி விலக்கு அளிக்க முற்படுகின்றன. இந்த விதிமுறை ரியல் எஸ்டேட் (Real Estate) தொழில்துறைக்கு முன்னர் ஒரு நிவாரண நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த தளர்வு ஒரு வருடம் வரை இருந்தது. பின்னர் இது இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. எனினும் இது தற்போதைய சூழ்நிலைகளில் போதுமானதாக இருக்காது” என்று முதல் நான்கு உலகளாவிய ஆலோசனை நிறுவனங்களில் இருந்து ஒருவர் கூறினார்.
விற்கப்படாத அலகுகளின் வரிவிதிப்பு குறித்த எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் (Union Budget) திட்டங்கள்
Budget 2021 திட்டங்களின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம், விற்கப்படாத அலகுகளின் வரிவிதிப்பை மற்றொரு வருடத்திற்கு நீட்டிக்கும். COVID-19 தாக்கத்தால் குடியிருப்பு பகுதிகள் விற்கப்படாமல் உள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த முடிவு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
ரியல் எஸ்டேட் துறை குறித்து ஆதாரங்கள் என்ன சொல்கின்றன
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, குடியிருப்பு அலகுகளை உருவாக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால், பங்கு-வர்த்தகமாக வைத்திருக்கப்படும் விற்கப்படாத அலகுகளுக்கு வரி விதிக்க முற்படும் வீட்டு சொத்து வருமானத்திற்கு வரிவிதிப்பு தொடர்பான விதிகளில் மாற்றங்களை செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR