LIC Policy: குழந்தைகளின் வளமையான எதிர்காலம், கல்வி, திருமணம், நல்வாழ்க்கை ஆகியவற்றை பற்றிய கவலையும் அவை ஒழுங்காக அமைய வேண்டும் என்ற ஆர்வமும் அனைத்து பெற்றோருக்கும் எப்போதும் இருக்கும். இவற்றுக்காக தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் திட்டங்களை தீட்டி பணத்தை சேமிக்கிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடனேயே நிதித் திட்டமிடலை தொடங்குவது மிக அவசியமாகும்.
இப்படிப்பட்ட திட்டமிடலுக்காகவே பிரத்யேகமாக பல திட்டங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுக்காப்புக்காக பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று எல்ஐசி கன்யாதான் பாலிசி (LIC Kanyadaan Policy).
எல்ஐசி கன்யாதான் பாலிசி
எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம். உங்கள் மகளின் வயது 1 முதல் 10 வயது வரை இருந்தால், நீங்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். எல்ஐசி -இன் கன்யாதான் பாலிசி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
LIC Kanyadan Policy: பாலிசி காலம் 13 முதல் 25 ஆண்டுகள் வரை
- இந்தத் திட்டத்தின் பாலிசி காலம் 13-25 ஆண்டுகள் ஆகும்.
- இத்திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் பிரீமியம் செலுத்தலாம்.
- 25 ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்பவர்கள் 22 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்த வேண்டும்.
- இந்தத் திட்டம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், அதாவது மெச்யூர் ஆகும்.
- மெச்யூரிடியில், முழுத் தொகையுடன் காப்பீட்டுத் தொகை + போனஸ் + இறுதி போனஸும் கிடைக்கும்.
- இந்த பாலிசியை எடுப்பதற்கு பெண்ணின் தந்தையின் வயது 18-50 -க்குள் இருக்க வேண்டும்.
LIC Kanyadan Policy: இரண்டு வழிகளில் வரி விலக்கு கிடைக்கும்
எல்ஐசி கன்யாதான் பாலிசியில் இரண்டு வழிகளில் வரிச் சலுகைகள் கிடைக்கும்.
- பிரீமியத்தை டெபாசிட் செய்யும் போது, 80C -இன் கீழ் வரி விலக்கு பலன் கிடைக்கும்.
- பிரிவு 10D -யின் கீழ் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- பாலிசிக்கான காப்பீட்டுத் தொகையின் வரம்பு குறைந்தபட்சம் ரூ. 1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
- இதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
மூன்றாம் ஆண்டு முதல் கடன் வசதியும் கிடைக்கும்
இந்த பாலிசியை வாங்கினால், இதில் கடன் வசதியும் கிடைக்கும். மூன்றாம் ஆண்டிலிருந்து கடன் வசதியை பெறலாம். இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், அதற்கான வசதியும் அளிக்கப்படுகின்றது. இது தவிர, பிரீமியம் செலுத்துவதற்கு சலுகைக் காலமும் கொடுக்கப்படுகின்றது. எந்த மாதத்திலாவது பாலிசியின் பிரீமியத்தை செலுத்த மறந்துவிட்டால், 30 நாட்கள் சலுகைக் காலத்தில் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த காலத்திற்கு எந்த தாமதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
திட்டத்தின் நன்மைகளை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்
- ஒரு நபர் 25 வருடங்களுக்கான திட்டத்தை எடுத்து ஆண்டு பிரீமியமாக ரூ.41,367 செலுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது மாதாந்திர பிரீமியம் ரூ.3,447 ஆக இருக்கும். இந்த பிரீமியத்தை அவர் 22 வருடங்கள் செலுத்துவார். அந்த நிலையில், 25 வருட காலப்பகுதியில் ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்.
- பாலிசி காலத்தின் போது தந்தை இறந்து விட்டால், அடுத்த காலத்திற்கான பிரீமியத்தை அவரது பெண் செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- இது தவிர, 25 ஆண்டு காலம் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ. 1 லட்சமும், 25வது ஆண்டில் மொத்த முதிர்வுத் தொகையும் கிடைக்கும்.
- சாலை விபத்தில் தந்தை இறந்தால், நாமினிக்கு இறப்பு உதவித்தொகையுடன் 10 லட்சம் ரூபாய் விபத்து மரண பலனும் வழங்கப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பாலிசி தொடர்பான கூடுதல் தகவல்களை https://lifeinsuranceofindia.in/lic-kanyadan-policy/ என்ற இந்த அதிகாரப்பூர்வ இணைப்பில் பெறலாம்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ