8th Pay Commission Latest News Updates: 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில், கடந்த ஜன. 16ஆம் தேதி மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான பரிசு ஒன்றை அறிவித்தது எனலாம். அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் தொடர்ந்து 8வது ஊதியக்குழுவை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை 8வது ஊதியக்குழுவுக்கு கடந்த ஜன.16ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்த நிலையில், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வரும் 2026ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
8வது ஊதியக்குழு: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்...
8வது ஊதியக்குழுவால் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் உயரும், ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியமும் உயரும். அதாவது இதன் மூலம் சுமார் 65 லட்ச ஓய்வூதியக்காரர்களும், 55 லட்ச மத்திய அரசு ஊழியர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஊழியர்களின் வருமானம், ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியம் ஆகியவை 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறபது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி முதல் 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது 8வது ஊதிக்குழுவுக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நோக்கி திரும்பி உள்ளது.
8வது ஊதியக்குழு: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்?
தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டிலும் 8வது ஊதியக்குழு முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துள்ளது. ஒருங்கிணைத்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் இரண்டையும் ஒருங்கிணைத்த திட்டம்தான் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம். இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், உத்தரவாதமான ஓய்வூதிய தொகை, குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ஆகிய பலன்கள் கிடைக்கும்.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் 2025ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வதியம் கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியதாரர் உயிரிழந்துவிட்டால், மொத்த ஓய்வூதிய தொகையில் 60% அவரது குடும்பத்திற்கு ஒரே பரிவர்த்தனையில் வழங்கப்படும்.
8வது ஊதியக்குழு: பென்ஷன் எவ்வளவு?
8வது ஊதியக்குழுவினால் அரசு ஊழியர்களுக்கு மாத அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் அதன் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அதிகரிப்புதான். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும்.
பணவீக்கம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அரசின் நிதி நிலைமை ஆகியவை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போது 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. தற்போது 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியிருக்க, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரத்து 480 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம் தற்போது ரூ.9 ஆயிரமாக வழங்கப்படும் நிலையில், ரூ.17 ஆயிரத்து 280இல் முதல் ரூ.25 ஆயிரத்து 740 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ