Fitment Factor Update: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குவதற்கு முன்பிருந்தே ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படப்போகும் திருத்தம் பற்றி பேச்சுக்கள் எழுந்து வந்தது. இந்த புதிய நிதியாண்டில் பல துறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டில் சம்பள கமிஷனை ஒழித்து புதிய பார்முலாவை அமல்படுத்தும் நோக்கில் அரசு செயல்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான சம்பளத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியிலும் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தபடி ஃபிட்மென்ட் காரணியில் திருத்தம் ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படக்கூடும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கையை புதிய நிதியாண்டில் அரசு மறு ஆய்வு செய்வதன் மூலம் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 2.57 மடங்கு ஃபிட்மென்ட் காரணி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023 முடிந்ததும் ஜியோ சினிமாவின் மிகப்பெரிய திட்டம்! உஷார் மக்களே!
தற்போதுள்ள 2.57 மடங்கு ஃபிட்மென்ட் காரணியை 3 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் சுமார் ரூ.3000 உயரும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்க வேண்டும் என்று மறுபக்கம் கூறப்படுகிறது, ஃபிட்மென்ட் காரணி இந்த அளவு உயர்ந்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் சுமார் ரூ.8000 வரை உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது, ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளம் ரூ.26,000 ஆக உயரும். இருப்பினும் ஃபிட்மென்ட் காரணி உயர்வு பற்றி அரசு எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூ.18,000. இதர அலவன்ஸ்கள் தவிர்த்து ரூ.18,000 X 2.57 = ரூ.46260. அதுவே 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால், இதர அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம். 26,000 X 3.68 = ரூ 95,680 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | மகிழ்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ