7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு

7th Pay Commission: அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 38 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 10:44 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.
  • ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
  • ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு title=

7வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!! மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் 129 ஆக இருந்த இந்த குறியீடு ஜூன் மாதத்தில் 129.2 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இது தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊழியர்களின் அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 4 சதவீத உயர்வு இருக்கும் என்பது தெளிவாகிறது.

ஜூன் மாதத்தின் எண்ணிக்கை 129.2 ஆக உயர்ந்துள்ளது

முன்னதாக, மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் வெளிவந்தவுடன் ஊழியர்களும் மகிழ்ச்சி ஆனார்கள். பிப்ரவரிக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து, ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீடு மே மாதத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்த முறை டிஏ உயர்வு குறைந்தது 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரலுக்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மே மாதத்தில் 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்தது. ஜூன் எண்ணிக்கை 129.2-ஐ எட்டியுள்ளது.

பிப்ரவரிக்குப் பிறகு ஏஐசிபிஐ குறியீடு கடுமையாக உயர்ந்தது

ஜனவரி 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 125.1 ஆக இருந்தது, இது பிப்ரவரியில் 125 ஆகக் குறைந்தது. பிப்ரவரி புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, மத்திய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த எண்ணிக்கை அவரது அகவிலைப்படியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து மே மாதத்தில் 129 புள்ளிகளை எட்டியது. இப்போது ஜூன் மாதத்தின் எண்ணிக்கை 129.2 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission: அடித்தது ஜாக்பார்ட்! இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வு! 

ஏஐசிபிஐ குறியீடு எப்படி உயர்ந்தது?

முன்னதாக பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் 1 புள்ளி அதிகரித்து 126 புள்ளிகளை எட்டியிருந்தது. இதன்பின், ஏப்ரலில் 1.7 புள்ளிகள் அதிகரித்து, 127.7 ஆக அதிகரித்தது. இதேபோல், மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 ஆக உள்ளது. தற்போது ஜூன் மாதத்தில் இது 0.2 சதவீதம் உயர்ந்து 129.2 என்ற அளவில் உள்ளது.

அகவிலைப்படி எவ்வளவு இருக்கும்

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 38 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. டிஏ 38 சதவீதமாக அதிகரித்தால், சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும். 4 சதவீத அகவிலைப்படி உயர்வால், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே காணலாம். 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியர்களின் அடிப்படை ஊதியம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ 21,622/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.19,346/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி 21,622-19,346 = ரூ 2260/மாதம் அதிகரித்தது
5. ஆண்டு ஊதிய உயர்வு 2260 X12 = ரூ 27,120

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6840-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ 8640

இந்த புள்ளிவிவரங்களை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஏஐசிபிஐ வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 4% DA உயர்வு, 18 மாத நிலுவைத் தொகை விரைவில்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News