7th Pay Commission ஜாக்பாட் செய்தி!! ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு, 4% டிஏ ஹைக்..ஒப்புதல் கிடைத்தது!!

7th Pay Commission: அகவிலைப்படி உயர்வுக்காக பல மாதங்களாக நீடித்து வந்த காத்திருப்பு முடிவுக்கு வந்தது. புதன்கிழமை, அதாவது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2023, 02:35 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி
  • அகவிலைப்படி 4% அதிகரித்தது.
  • ஊதிய உயர்வு கணக்கீடு இதோ.
7th Pay Commission ஜாக்பாட் செய்தி!! ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு, 4% டிஏ ஹைக்..ஒப்புதல் கிடைத்தது!! title=

7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு: தீபாவளிக்கு முன்னதாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்காக பல மாதங்களாக நீடித்து வந்த காத்திருப்பு முடிவுக்கு வந்தது. புதன்கிழமை, அதாவது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஜூலை 1, 2023 முதல் உயர்த்தப்பட்ட டிஏவின் பலனைப் பணியாளர்கள் பெறுவார்கள். தற்போது, ​​அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது, இது 46 சதவீதமாக உயர்த்தப்படும்.

48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்

அக்டோபர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்துடன், மூன்று மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அரசின் இந்த முடிவால் மத்திய ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். உண்மையில், இந்த முறை 3 சதவிகிதம் டிஏ உயர்வு இருக்கும் என பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டது. இதையடுத்து, அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த உயர்வால் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இது தொடர்பான அறிவிப்பு பிற்பகல் 3 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அரசாங்கத்தால் வெளியிடப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!

அரசுக்கு 17000 கோடி கூடுதல் சுமை ஏற்படும்

ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் நவராத்திரியின் போது, ​​டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளித்து, ஊழியர்கள் அக்டோபர் சம்பளத்தில் உயர்த்தப்பட்ட பணத்தை பெற அமைச்சரவை வழிவகை செய்துள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக, அரசு கருவூலத்தில் சுமார் 17000 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும். இம்முறை சம்பளத்தில் டிஏ நிலுவை தவிர, தற்காலிக போனஸும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இது தவிர, ரயில்வே ஊழியர்களுக்கு திபாவளி ஆண்டு போனஸ் வழங்கப்படும். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நல்ல தொகையும் வரும்.

7th Pay Commission: அடிப்படை சம்பள கணக்கீடு

மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளதால், அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இந்த கணக்கீடு மூலம் புரிந்து கொள்ளலாம். 

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்

புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640

அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900

புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News