மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: 2 புத்தாண்டு பரிசுகள்... DA, HRA இரண்டும் அதிகரிக்கும்

7th Pay Commission: ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஆண்டின் துவகத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு சில பம்பர் பரிசுகள் கிடைக்கவுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 30, 2023, 03:16 PM IST
  • 7வது சம்பள கமிஷன், சமீபத்திய செய்திகள்.
  • டிஏ எவ்வளவு அதிகரிக்கும்?
  • HRA எவ்வளவு அதிகரிக்கும்?
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: 2 புத்தாண்டு பரிசுகள்... DA, HRA இரண்டும் அதிகரிக்கும் title=

7வது சம்பள கமிஷன், சமீபத்திய செய்திகள்: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த ஆண்டு, ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஆண்டின் துவகத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு சில பம்பர் பரிசுகள் கிடைக்கவுள்ளன. மத்திய அரசு ஊழியர்கள் புத்தாண்டு பரிசாக இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெறுவார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

டிஏ எவ்வளவு அதிகரிக்கும்?

ஜனவரி முதல் ஜூன் அரையாண்டு வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike) 4 முதல் 5 சதவீதம் வரை இருக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) 46 சதவிகித அகவிலைபப்டியை பெற்று வருகிறார்கள். ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயரும். அகவிலப்படி 5 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 51 சதவிகிதமாக அதிகரிக்கும். எப்படியும் ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி குறைந்தபட்சம் 50% -ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வந்தவுடன் தான் இதற்கான தெளிவு கிடைக்கும்.

விட்டு வாடகை கொடுப்பனவு

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 50% -க்கு மேல் போனால், வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) திருத்தப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, அகவிலைப்படி (Dearness Allowance) ஐம்பது சதவீதத்தைத் தாண்டும்போது எச்ஆர்ஏ (HRA) திருத்தப்படும். வீட்டு வாடகை கொடுப்பனவை பொறுத்தவரை நகரங்கள் X, Y மற்றும் Z என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

HRA எவ்வளவு அதிகரிக்கும்?

X, Y மற்றும் Z சிறு நகரங்கள் / நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் தற்போது 27%, 18% மற்றும் 9% HRA பெறுகின்றனர். தற்போது HRA அதிகரித்தால் X பிரிவில் வசிக்கும் மத்திய ஊழியர்களின் HRA 30% ஆக உயரும். இதேபோல், Y பிரிவுக்கான HRA 20% ஆகவும் Z பிரிவுக்கான HRA 10% ஆகவும் அதிகரிக்கும். இது அகவிலைப்படி உயர்வுடன் ஊழியர்களுக்கு புத்தாண்டில் மற்றொரு ஜாக்பாட் செய்தியாக இருக்கும். இதனால் ஊழியர்க்களின் ஊதியத்தில் கணிசமான ஏற்றம் ஏற்படும். 

மேலும் படிக்க | கோயம்புத்தூர் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை.. மகிழ்ச்சியில் கோவை மக்கள்! 

இதற்கான அறிவிப்பு எப்போது வரும்? 

இதுவரை இருந்த முறைப்படி, ஜனவரி முதல் ஜூலை மாதங்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்படும். அதேநேரம், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. 

மக்களவை தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்

மக்களவைத் தேர்தலுக்கு முன், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மக்களவைத் தேர்தல் தேதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களுக்கு இடையில் அறிவிக்கப்படலாம். அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். அதன் பிறகு மத்திய அரசால் டிஏ -வை (DA) உயர்த்த முடியாது. இதற்கு முன், பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மத்திய ஊழியர்களை கவரும் வகையில், டிஏ குறித்த முடிவை மோடி அரசு எடுக்கக்கூடும். இதன் மூலம் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | டிசம்பர் 31 முதல் Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது: வெளிவந்த NPCI சுற்றறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News