இலங்கையின் புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்!
இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் நெருக்கடி நிலையிலும், கண்டி மாவட்டத்தில் பெரும் வன்செயல்கள் நடந்துவரும் நிலையிலும் நாட்டில் அவசர பிரகடன நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் கலவரக்காரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்க நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எனினும் நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், தேவையான பாதுகாப்புகளை அளிக்க வேண்டும் என வீதிகளில் ஒன்றுக்கூடி குரல் எழுப்பினர். நாட்டில் தொடர் அமலி நிலவி வரும் நிலையில் இந்த பதவி பிரமானம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!