இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பொறுப்பேற்ற உடனேயே, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க ஒரு முடிவாக, அலுவலர்களுக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறையை அறிவித்ததோடு, அரசு அலுவலகங்களின் நேரத்தை 10 மணி நேரமாக அவர் மாற்றியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
"இனி ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை இல்லை. ஒரு அதிகாரப்பூர்வ வார விடுமுறை மட்டுமே இருக்கும் என பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அவர் அரசு அலுவலகங்களின் அலுவலக நேரத்தை மாற்றி காலை 10 மணி முதல் இரவு 8 மணியாக்கியுள்ளார்." என்று சமா நியூஸ் தெரிவித்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும், இம்ரான் கான் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை புதிய அரசு திரும்பப் பெற வேண்டி இருக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க | புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா
பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷேபாஸ் ஷெரீப் திங்கள்கிழமை பதவியேற்றார்.
வாக்கெடுப்புக்கு முன்னதாக துணை சபாநாயகர் காசிம் சூரி ராஜினாமா செய்த பின்னர் அமர்வுக்கு தலைமை தாங்கிய பிஎம்எல்-என் தலைவர் அயாஸ் சாதிக், "மியான் முகமது ஷேபாஸ் ஷெரீப் 174 வாக்குகளைப் பெற்றுள்ளார்" என்று அறிவித்தார்.
அதிபர் ஆரிப் ஆல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப்புக்கு செனட் தலைவர் சாதிக் சஞ்சரானி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையில், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், நாடு திரும்பாமல் லண்டனிலேயே தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR