கராச்சியில் சீன போர்க்கப்பல்களுடன் பாகிஸ்தானின் submarine நிறுத்தப்பட்டது ஏன்?

கராச்சியில் சீன போர்க்கப்பல்களுடன் பாகிஸ்தானின் submarine நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2020, 08:35 PM IST
  • இந்தியாவிற்கு அருகில் கடற்படையை சீனா அதிகரித்து வருவது குறித்து இந்தியா க்டந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது
  • Agosta-90b ரக நீர்மூழ்கி கப்பல், பாகிஸ்தானில் Hashmat class என்று அழைக்கப்படுகிறது
  • ஜனவரி 13 ஆம் தேதி, சீனா பாகிஸ்தானுடன் அரேபிக் கடலில் ஒரு பெரிய கடற்படை பயிற்சியை மேற்கொண்டது
கராச்சியில் சீன போர்க்கப்பல்களுடன் பாகிஸ்தானின் submarine நிறுத்தப்பட்டது ஏன்? title=

புதுடெல்லி: இந்தியாவிற்கு அருகில் கடற்படையை சீனா அதிகரித்து வருவது குறித்து இந்திய கடற்படைத் தலைவர் க்டந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்...

அடுத்த மாதத்திலேயே, அதாவது இந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி, சீனா பாகிஸ்தானுடன் அரேபிக் கடலில் ஒரு பெரிய கடற்படை பயிற்சியை மேற்கொண்டது. 

இந்தப் பயிற்சிக்கு 'sea guardians' (கடல் பாதுகாவலர்கள்) என இரு நாடுகளும் பெயரிட்டன. அப்போது சீனப் போர்கப்பல்கள் அங்கு சென்றன. சீனா தனது சூழ்ச்சியை நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுவதற்கு இதுவே அடிப்படை. சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு அருகில் தங்கள் இருப்பை சீராக மேம்படுத்திக் கொண்டிருப்பது கவலை தருகிறது.

ஏழு மாதங்களுக்கு பிறகும் சீனப் போர்க்கப்பல்கள் கராச்சி துறைமுகத்தில் இன்னும் நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு இரு நாடுகளுமே விடையளிக்கவில்லை.

planet-scope வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரவுகளை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் Hi Sutton என்ற பத்திரிகையாளர் தொகுத்துள்ளார். சீன போர்க்கப்பல்களிடையே பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

Agosta-90b ரக நீர்மூழ்கி கப்பல், உள்நாட்டில் Hashmat class என்று அழைக்கப்படுகிறது.இது பாகிஸ்தானின் கடற்படை ஆயுத பலத்தில் மிகவும் சக்திவாய்ந்தது மட்டுமல்ல, இது நவீன நீர்மூழ்கிக் கப்பல் என்றும் கூறப்படுகிறது.  நவீன போர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள submarine இது. இது பாகிஸ்தானின் பூர்வீக Babur-3 கப்பல் ஏவுகணைக்கான ஏவுதளம் என்றும் கூறப்படுகிறது. 

சீனக் கப்பல்களுடன் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவது தற்செயலாக நிகழ்வாக இருக்க முடியாது. இரு தரப்பினரும் கடல்களில் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதால், பாகிஸ்தான் அதன் மிக சாத்தியமான ஆயுத தளங்களில் ஒன்றின் உள் செயல்பாடுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது.

நிலப் பகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் தொடர்பாக இந்தியாவுடன் இந்த இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை எழுப்புவது உலகம் அறிந்த உண்மை. அதே நேரத்தில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையில் (CPEC) கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

Read Also | US Navy assault ship தீப்பிடித்ததில் 17 மாலுமிகள், 4 சிவிலியன்கள் காயமடைந்தனர் 

பாகிஸ்தானில் China-Pakistan Economic Corridor(CPEC) கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் பெய்ஜிங்கின்  விரக்தி அதிகரித்து வருகிறது. சீனத் தொழிலாளர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களிடையே வாக்குவாதங்கள், மோதல்களாக மாறுவது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.  இந்த திட்டம் தொடர்ப்பான வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தும் நடைமுரைகளும் தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன.

இரு நாடுகளிலும் இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தில் ஊழல் நடந்துள்ளது ஒருபுறம் என்றால், பலூச் கிளர்ச்சியாளர்களின் வன்முறை அதிகரித்து வருவதும் இரு நாடுகளுக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது, அவர்கள் முழு திட்டத்தையும் தடம் புரட்டுவதாக அச்சுறுத்துகின்றனர். பாகிஸ்தானில் சீனாவின் இருப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில், இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான வேறுபாடுகளும் அதிகரித்து வருகின்றன.

Trending News