Space War: விண்வெளியில் சீனா-அமெரிக்க போர் மூண்டுள்ளதா; கலக்கத்தில் உலகம்..!!

கடந்த ஓரிரு மாதங்களில் சர்வதேச விண்வெளி நிலையம், சீன விண்வெளி நிலையம், செயற்கைக்கோள் ஆகியவை நேருக்கு நேர் மோதுவது போன்ற சூழல்கள் உருவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2021, 02:30 PM IST
  • விண்வெளியில் மோதல் ஏற்படுவது முதல் முறை அல்ல.
  • ஒருமுறை ஜூலை 1ஆம் தேதியும், இரண்டாவது முறையாக அக்டோபர் 21ஆம் தேதியும் ஏற்படும் நிலை.
  • சீனாவின் விண்வெளி நிலையம் மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Space War: விண்வெளியில் சீனா-அமெரிக்க போர் மூண்டுள்ளதா; கலக்கத்தில் உலகம்..!! title=

புதுடெல்லி: விண்வெளியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. விண்வெளி என்பது விபத்துகளின் மையமாகவோ அல்லது போர் மூளும் இடமாகவோ மாறுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது கற்பனையல்ல, நிஜம். 

கடந்த ஓரிரு மாதங்களில் சர்வதேச விண்வெளி நிலையம், சீன விண்வெளி நிலையம், செயற்கைக்கோள் ஆகியவை நேருக்கு நேர் மோதுவது போன்ற சூழல்கள் உருவாகி வருகின்றன. அவசர நடவடிக்கைகளை எடுத்து விண்வெளி நிலையங்களின் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

சீன விண்வெளி நிலையம் மீது மோத இருந்த செயற்கைக்கோள் அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா உரிமையாளருமான எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த புகாரில், மஸ்கின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் செயற்கைக்கோள், சீன விண்வெளி நிலையத்தை தாக்க இருப்பதாக சீனா கூறியது.

ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!

விண்வெளி நிலையமும் செயற்கைக்கோளும் மோதுவது போன்ற சூழல் ஏற்பட்டது இது முதல் முறை அல்ல. ஒருமுறை ஜூலை 1ஆம் தேதியும், இரண்டாவது முறையாக அக்டோபர் 21ஆம் தேதியும் மோதுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையம் மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று சீனா கூறியது. ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் 1,700 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் குழுவாகும். அதன் நோக்கம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இணைய வசதியை எட்ட செய்வது ஆகும்.

விண்வெளி நிலையத்தில் குப்பைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, நாசா (NASA) தொடர்ந்து கூறி வரும் நிலையில், முன்னதாக இந்த ஆண்டு நவம்பரில், ரஷ்யா தரஷ்யா தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகளில் ஒன்றை சோதனை செய்வதற்காக தனது சொந்த செயற்கைக்கோளான 'Tselina-D' ஐ விண்வெளியில் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய குப்பை பொருட்கள் சேர்ந்துள்ளது. ரஷ்ய செயற்கைக்கோளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றி நகரத் தொடங்கி, ஐஎஸ்எஸ் மீது மோதும் அபாயம் ஏற்பட்டது.

ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

மோதலை தவிர்ப்பதன் முக்கியத்துவம்

சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து 420 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 17,000 மைல் வேகத்தில் சுழல்கிறது. ஒரு சிறிய வைக்கோல் கூட இந்த வேகத்தில் தாக்கினால், பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிய மோதல்கள் கூட தவிர்க்கப்பட வேண்டும். 

விண்வெளியில் குவியும் ஆயுதங்கள்

பல சமீபத்திய அமெரிக்க ஊடகங்கள் சீனா விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதாகக் கூறின. இதை அடுத்து சீனா விண்வெளியில் தனது செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சீனாவும் அமெரிக்கா மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது நடந்தால், விண்வெளி மிகவும் பாதுகாப்பற்ற இடமாகவும், விண்வெளியில் போர் மூளும் அபாயமும் ஏற்படலாம்.

ALSO READ | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

விண்வெளியில் உள்ள செயலற்று போன செயற்கைக்கோள்களை அழிக்க பூமியில் இருந்து செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது, ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா மட்டுமே இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்ய முடிந்தது. மார்ச் 2019 இல், இந்திய விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். 

அதே நேரத்தில், இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது, இது ஒரு தனித்துவமான விண்வெளி நிலையமாக இருக்கும். அதாவது, விண்வெளி இனி 'வெற்றிடம்' இல்லை, இப்போது குப்பைகள், ஆயுதங்கள், போர் சூழல் விபத்துக்களின் இடமாக மாறி வருகிறது. மேலும் விண்வெளியில் போர் மூண்டால், நமது அன்றாட வாழ்க்கையில் கூட அது பெரும் தாக்கத்தை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News