29 வயதான இந்தோனேசிய பெண் பாடகர் இர்மா புலே(Irma Bule) தனது மேடை நிகழ்ச்சியின் போது பாம்புகளை பயன்படுத்துவது வழக்கம். கடைசியாக இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் ஒரு காரவாங்(Karawang) கிராமத்தில் மேடையில் நிகழ்ச்சியின் போது பாம்பு கடித்து விட்டது. ஆனாலும் தொடர்ந்து 45 நிமிடம் பாடிக்கொண்டே இருந்தார். அதன் பிறகு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவள் வரும் வழியில் இறந்து விட்டதாக டாக்டர் கூறி விட்டார்.
அவரது முந்தைய நிகழ்ச்சிகளில் இராஜநாகம்மற்றும் மலைப்பாம்புகள் பயன்படுத்தப்பட்டிருகிறது. ஆனால் இப்படி எதுவும் நடக்க வில்லை. அவள் இரண்டாவது பாடல் மத்தியில் பாடிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக பாம்பின் வாலை தன் கலால் மிதித்து விட பாம்பு அவள் தொடையில் கடித்தது என்று பெர்லாண்டோ அக்டவியன் கூறினர்.