2020 தேர்தலில் அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ராப் பாடகர் கன்யே வெஸ்ட் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டுகிறது. இதற்கு தொழில் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk ) ஆதரவு தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற ராப் பாடகர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதில் தீவிரமாக இருக்கிறாரா அல்லது தேர்தல் போட்டியிட ஏதேனும் ஆவணங்களை அதிகார பூர்வமாக தாக்கல் செய்தாரா என்பது பற்றி உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.
ALSO READ | ரஷ்யாவை சீண்டும் சீனா, நட்பின் கண்ணை மறைத்த சுயநலம்!!
வாஷிங்டன்(Washington): அமெரிக்க ( America) அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ( Donald Trump) ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட், 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார். இது குறித்து அவர் உறுதியாக இருக்கிறாரா அல்லது முறைப்படி அதற்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்துள்ளாரா என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் இல்லை.
எப்படி இருந்தாலும், அவரது அறிவிப்பு டிரம்பிற்கும் அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கும் இது ஒரு வெளிப்படையான சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க ( America) அதிபர் தேர்தல் 2020 நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
"கடவுள் மீது நம்பிக்கை வைத்து, அனைவரது குறிக்கோள்களை ஒன்றிணைப்பதன் மூலம், நமது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வாக்குறுதியை நாம் இப்போது நினைவு கூற வேண்டும். நான் அமெரிக்காவின் அதிபராக போட்டியிடுகிறேன்" என்று கன்யே வெஸ்ட் (Kanye West) ஒரு ஈமோஜியுடன் ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | ரஷியாவின் Vladivostok நிறுவக கொண்டாட்டத்தால் சீனா எரிச்சல்... காரணம் என்ன...
எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் (Tesla ) தலைமை நிர்வாகியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு பிரபலும் ஆன எலோன் மஸ்க் (Elon Musk), கன்யே வெஸ்ட் ட்வீட்டிற்கு பதிலளித்து, "உங்களுக்கு எனது முழு ஆதரவு இருக்கிறது!" என ட்வீட் செய்தார்.
சுயேச்சை வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் சேர்க்கும் காலக்கெடு இன்னும் பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்படவில்லை.
ராப் பாடகர் கன்யே வெஸ்ட் அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் வாக்களிக்கப் போவதாகக் கூறினார்.
வெஸ்ட் அமெரிக்க அதிபர் அலுவகமான ஓவல் அலுவலகத்திற்கு, 2018 அக்டோபர் சென்று " Make America Great Again " தொப்பியை அணிந்துகொண்டு, டிரம்புடன் போஸ் கொடுத்தார். "நான் இந்த பையனை இங்கேயே நேசிக்கிறேன்" என்று ட்ரம்பும் கூறினார்.
ராப் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவியும், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியனும் (Kim Kardashian ) குற்றவியல் நீதி சட்டம் தொடர்பான சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ஆர்வலராக வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.