மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய மருத்துவர்கள்!

மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு  மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அலபாமாவில் உள்ள மருத்துவர்கள் வெற்றிகரமாக பொறுத்தியுள்ளனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 11:11 AM IST
  • அலபாமா பல்கலைக்கழகத்தில் ஒரு அறிய வகை அறுவை சிகிச்சையினை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.
  • மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இரண்டு சிறுநீரகங்கள் உடலில் பொறுத்தியுள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய மருத்துவர்கள்!  title=

ஒரு மனிதரின் உடலில் உள்ள உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது உறுப்பு சிதைவுற்றாலோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.  தற்போது பலரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய தொடங்கிவிட்டனர்.  மருத்துவர்கள் (Doctors) இதைவிட ஒருபடி மேலே சென்று விலங்குகளிடம் இருந்து உறுப்பை பெற்று அதனை மனிதருக்கு பொருத்தி வெற்றி காண்கின்றனர்.  

ALSO READ | மக்களே உஷார்; இதுதான் ஒமிக்ரானின் 14 முக்கிய அறிகுறிகள்

அந்த வகையில் அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் ஒரு அறிய வகை அறுவை சிகிச்சையினை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.   கடந்த ஆண்டு செப்டம்பரில் 57 வயதான ஜிம் பார்சன்ஸ் என்ற நபர் பைக் விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.  இந்நிலையில் பார்சன்ஸ் குடும்பத்தினர் அனுமதியோடு மருத்துவர்கள் அவரது சிறுநீரகங்களை எடுத்துவிட்டு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இரண்டு சிறுநீரகங்கள் அவரது உடலில் பொறுத்தியுள்ளனர். 

dco

அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகங்கள் அவரது உடலில் சிகிச்சை நிறைவடைந்த உடனேயே செயல்படத் தொடங்கி இருக்கிறது.  கிட்டத்தட்ட பன்றியின் உறுப்புகள் மனிதனின் உறுப்புகளுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இவற்றிற்கு மரபணு மாற்றம் செய்து அதனை மனிதனின் உடலுக்கு மாற்ற ஏதுவாக உள்ளது என்று கூறப்படுகிறது. 

மேலும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்று அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தி அவரை உயிர்பிழைக்க செய்த சம்பவம் வரவேற்பை பெற்றது.  உறுப்புகள் தானம் பற்றக்குறையாக இருக்கும் பட்சத்தில் பன்றியிலிருந்து மனிதர்களுக்கு உறுப்பு பொறுத்தப்படுவது சிறப்பானதாக உள்ளது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.  மருத்துவ அறிக்கைகளின்படி, தற்போது 100,000 அமெரிக்க குடிமக்கள் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Medical Miracle: பன்றியின் இதயத்தை மனித உடலில் வைத்து அறுவை சிகிச்சை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News